நமக்கெல்லாம் நீதிபதி, அதிலும் தலைமை நீதிபதி யார் தெரியுமா? சனி பகவான் தான்! யாருக்கு பயப்படுகிறோமோ... சனீஸ்வரருக்குப் பயப்படாதவர்களே இல்லை. இந்த நீதிமானிடம் இருந்து எவரும் தப்பவே முடியாது!
தண்டனை என்றுதான் பெயர். ஆனால் அது தண்டனை அல்ல. திருந்தி வாழ்வதற்கான வாய்ப்பு. எனவே சனி பகவான் நம்மைத் திருத்துவதில் குறியாக இருப்பவர். சின்னச் சின்ன கசடுகளைக் கூட, நம்மிடம் இருந்து கடாசிவிடுவார் சனி பகவான்!
இவர் தண்டிக்கக் கூடிய தெய்வம் என்கிறார்கள். அப்படியில்லை. திருத்தும் தெய்வம் சனி பகவான். இவர் சோதனைப்படுத்துவார். சோதனைக்குள்ளாக்குவார். இவை அனைத்துமே நம்மைத் திருத்துவதற்காகவே! நம்மை செம்மைப்படுத்துவதற்காகவே! எனவே சனி பகவானை நினைத்து அச்சப்படத் தேவையே இல்லை.
தவறு செய்பவர்கள்தான் பயப்படவேண்டும். அப்படித் தவறு செய்து கொண்டிருப்பவர்களை இவர் மன்னிப்பதும் இல்லை என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். சனி தோஷம் இருப்பவர்கள், சனி பகவானை முறையே தரிசித்து வந்தாலே போதும். நம்மை நெறிப்படுத்தி, நமக்கு வேண்டியதையெல்லாம் தந்தருளும் பரோபகாரிதான் சனீஸ்வர பகவான்!
சனிக்கிழமை தோறும், ஆலயத்துக்குச் சென்று, எள் தீபமேற்றி, சனீஸ்வரரை வழிபடுங்கள். சனி பகவானை வணங்கும் போது, நேருக்கு நேர் நின்று தரிசிக்கக் கூடாது என்பார்கள். குரு பிரம்மா முதலானோரை நேராக நின்று தரிசிக்க வேண்டும். சனீஸ்வர பகவானை கொஞ்சம் பக்கவாட்டில் நின்றபடி, தரிசிப்பதே உகந்தது என்பார்கள்.
கிரகங்களில் ஈஸ்வரப் பட்டம் பெற்றவர் சனி பகவான். அதனால்தான் நவக்கிரகங்களில் எந்த கிரகத்துக்கும் ஈஸ்வரப் பட்டம் சேர்த்துச் சொல்லுவதில்லை. இவரை மட்டுமே சனீஸ்வரர் என்று போற்றுகிறோம்.
சனிக்கிழமைகளில், சனீஸ்வரரைத் தரிசித்து, அவருக்கு எள் தீபமேற்றி, மனதார வேண்டுங்கள். இழந்ததையெல்லாம் தந்தருள்வார் சனிபகவான். ஈடு இணையற்ற வாழ்க்கையைத் தருவார் சனீஸ்வரர்!
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
45 mins ago
ஆன்மிகம்
11 hours ago
ஆன்மிகம்
20 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago