ஈசிஆரில் உள்ள இஸ்கான் கோயிலில் 25-ம் தேதி கவுர பூர்ணிமா விழா

By செய்திப்பிரிவு

சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இஸ்கான் கோயிலில் வரும் 25-ம் தேதி கவுர பூர்ணிமா விழா நடைபெறுகிறது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ‘ஸ்ரீ சைதன்யா’ எனும் திருநாமத்தில் பக்தராக அவதரித்த நாள் ‘கவுர பூர்ணிமா’ என்று போற்றப்படுகிறது.

அன்றைய தினம் பக்தர்கள் விரதம் இருந்து, ஹரே கிருஷ்ணர் ஜபம் செய்து ஸ்ரீசைதன்யா மகாபிரபுவை வழிபடுவார்கள். இந்நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் உள்ள இஸ்கான் கோயிலில் வரும் 25-ம் தேதி கவுர பூர்ணிமா விழா கொண்டாடப்படுகிறது.

அதன்படி, 25-ம் தேதி காலை 4.30 மணிக்கு மங்கள ஆரத்தி நிகழ்வும், 7.45 மணிக்கு சிருங்கர் ஆரத்தி, 8 மணிக்கு மத் பாகவதம் வகுப்பும் நடைபெறுகிறது.

அதைத் தொடர்ந்து காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கீர்த்தனை மேளா நிகழ்வும், மாலை 5.30 மணிக்கு ஸ்ரீஸ்ரீ கவுர நிதை அபிஷேகமும், 6.15 மணிக்கு சைதன்ய கரிதாமிர்தம் குறித்தவகுப்பும், 7 மணிக்கு கவுரா ஆரத்தி,7.30 மணிக்கு அனுகல்ப பிரசாதம் நிகழ்வும் நடைபெறுகிறது.

முன்னதாக மார்ச் 24-ம் தேதி ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோயில் வளாகத்தில் ஹோலிகா தஹன் நிகழ்ச்சி இரவு 11 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இஸ்கான் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

5 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

மேலும்