ஐயப்ப பக்தர்களே... உங்களுக்காக..!
ஐயப்ப பக்தர்களுக்கான விரதங்களில் மூன்று விரதங்கள் ரொம்பவே முக்கியமானவை என்கிறார்கள் குருசாமி மார்கள். புத வார விரதம் என்று சொல்லப்படும் புதன் கிழமை விரதம். சனி வார விரதம் என்று அழைக்கப்படும் சனிக்கிழமை விரதம். அடுத்து... ஐயப்பனின் ஜன்ம நட்சத்திரமான உத்திர நட்சத்திர விரதம்.
அதாவது, ஏதேனும் ஒரு புதன்கிழமை, சனிக்கிழமை அல்லது உத்திர நட்சத்திர நாள் ஆகியவற்றில், ஐயப்ப சுவாமியை நினைத்து இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.
முதல் நாள், மதிய உணவுக்குப் பிறகில் இருந்து இந்த விரதத்தைத் தொடங்க வேண்டும். இரவில் சாப்பிடாமல் இருக்கவேண்டும். இயலாதவர்கள், பால் பழம் மட்டும் எடுத்துக் கொள்ளலாம். விரத நாளில், அதாவது மறுநாளில்... அதிகாலையிலேயே எழுந்து, குளித்து விடவேண்டும். நித்தியக் கடமைகளையும் பூஜைகளையும் செய்ய வேண்டும். ஐயன் ஐயப்ப சுவாமிக்கான பூஜைகளில் ஈடுபடவேண்டும். ஐயப்ப நாமாவளியைச் சொல்லுங்கள்.
முடிந்த அளவுக்கு, ஜபம், ஐயப்ப மூல மந்திரம்,பாராயணம் ஆகியவற்றில் ஈடுபடுங்கள். அருகில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு, காலையும் மாலையும் சென்று தரிசியுங்கள்.
விரதம் இருக்கும் போது, ஐயப்பனுக்கு நைவேத்தியம் செய்து, அந்த உணவை ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது, மகா புண்ணியம் என்கிறார்கள், ஐயப்ப குருசாமிகள்.
கிட்டத்தட்ட, கல்பாத்தி ஸ்ரீநிவாச ஐயர் என்கிற சாமி அண்ணா, தன் நித்தியானுஷ்டங்களை முறையே கடைப்பிடித்து வந்தார். அதேசமயம் ஐயப்பன் திருநாமத்தை, வார்த்தைக்கு வார்த்தை சொல்லிக் கொண்டே இருந்தார்.
அதனால்தான் கௌரவமும் பதவியும் மரியாதையும் புகழும் இவரைத் தேடி வந்தன. சபரிமலையின் ‘தேவஸ்வம் போர்டு கெஸ்ட்’ எனும் சிறப்புத் தகுதி சாமி அண்ணாவுக்குக் கிடைத்தது.
ஆரம்ப காலகட்டத்தில், சின்னச் சின்னதான பிரச்னைகளும் குழப்பங்களும் சபரிமலை நிர்வாகத்தில் இருந்தபோது, சாமி அண்ணாவின் வழிகாட்டுதலாலும் யோசனையாலும் உடனுக்குடன் சீர்செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி, பல விஷயங்கள் இன்றைக்கு நடைமுறையில் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை, சாமி அண்ணாவும் அப்போது இருந்த அதிகாரிகளாலும் தந்த்ரிகளாலும் மேல்சாந்திகளாலும் கூடிப் பேசி, கொண்டுவரப்பட்டன.
சதாசர்வ காலமும் சாஸ்தாவின் நினைப்பிலேயே மூழ்கி, சாஸ்தா பக்தியே வாழ்க்கை என்பதானார் சாமி அண்ணா. ஆரம்பத்தில், ‘சாமி ஐயர்’ என்றுதான் அழைக்கப்பட்டு வந்தார். ‘ஜாதிலாம் எதுக்கு. ஐயப்பனுக்கு முன்னே எல்லாரும் ஒரே ஜாதிதான்’ என்று வலியுறுத்த, ‘சாமி ஐயர்’ பிறகு ‘சாமி அண்ணா’ என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார்.
1980ம் வருடம். சிருங்கேருஇ சங்கராச்சார்ய சுவாமிகள் இரண்டுபேரும் (ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தர், ஸ்ரீபாரதி தீர்த்தர்), சபரிமலைக்கு விஜயம் செய்தார்கள். சபரிமலை தேவஸம் போர்டு நிர்வாகிகள், சாமி அண்ணாவுக்கு அழைப்பு விடுத்தது. ‘சுவாமிகள் வரும்போது, நீங்க கூட இருந்தா நல்லாருக்கும்’ என்று கேட்டுக் கொண்டது.
சாமி அண்ணாவின் செயல்பாடுகள், சுவாமிகளுக்கு எடுத்துச் சொல்லப்பட்டன. அதைக்கேட்டு சுவாமிகள் வியந்து, அவரை ஆசீர்வதித்தார்கள். ‘பகவானுக்குத் தொண்டு செய்ற கைங்கர்யத்தை விட்டுடாதீங்கோ. இன்னும் இன்னுமா நெறய்யப் பண்ணுங்கோ. ஐயப்பனே உங்களுக்குக் கொடுத்த பொறுப்பு இது. ஐயப்ப ஆசீர்வாதம் பூரணமா இருக்கு’’ என்று சொல்லி ஆசி வழங்கியதை, சாமி அண்ணாவின் குடும்பம், சொல்லிச் சொல்லிப் பூரிக்கிறது.
ஆன்மாக்களுக்கே உரித்தான அத்தனை நல்லொழுக்கங்களுக்கும் அவர் உறைவிடமாக விளங்கினார். பக்தர்கள், ஐயப்பன் மார்கள், சிஷ்யர்கள் மட்டுமல்லாது, சபரிமலையில் பணிபுரிந்த ஊழியர்கள், மற்ற குரு சுவாமிகள் முதல் சும்மாடு தூக்கும் கூலிக்காரர்கள் வரை அனைவருமே அவர் மேல் அன்பு செலுத்தி மதித்தார்கள். அனைவரிடமுமே அன்புடனும் கனிவுடனும் பழகினார் சாமி அண்ணா.
வெகு சில நாட்களிலேயே சாமி அண்ணாவை நாடி பலரும் வரத்துவங்கினார்கள். அவர் பெருமை எங்கும் பரவியது. அவரை நமஸ்கரித்தால் போதும்; அவர் கையில் ப்ரஸாதம்
வாங்கினால் போதும் என்று ஆத்மார்த்தமாக நினைத்தார்கள். அவர் ஆசீர்வதித்தவர்களுக்கு, தடைபட்ட திருமணங்கள் நடந்தன. குழந்தை பாக்கியம் கிட்டியது. நல்ல வேலை அமைந்தது -பலநாட்பட்ட நோய் அகன்றன.
சபரிமலை யாத்திரையில் எத்தனை பேர் வந்தாலும் சளைக்காத அன்னதானம் செய்து வந்தார். இவர்களது குழுவில் மட்டுமே 500க்கும் மேற்பட்ட ஐயப்பன்மார்கள் என்றால், மற்ற பக்தர்களுக்கும் சேர்த்து, எப்படிப்பட்ட அன்னதானமும் சமையலும் நடைபெற்றிருக்க வேண்டும் என்று நினைத்துப் பார்க்கவே மலைப்பு உண்டாகிறது.
இவற்றையெல்லாம் சொல்லி, சாமி அண்ணாவை யாரேனும் புகழ்ந்தால், சட்டென்று அந்தப் பேச்சை நிறுத்திவிடுவார் அவர். ‘சாவியைப் போட்டா, வண்டி மோட்டார் ஓடுறது. அதனால வண்டியும் ஓடுறது. ஆனா வண்டி ஓடணும்னா டிரைவர் வேணும். முக்கியமா பெட்ரோலோ டீசலோ வேணும். இதுல, நான் மோட்டாரா, டிரைவரா, பெட்ரோல் டீசலா... தெரியலை. சாவிதான் ஐயப்ப சுவாமி. நான் இப்படி ஏதோவொரு கருவி. அவ்ளோதான்...’ என்று கண்கள் மூடி, நெஞ்சில் கைவைத்து, மெய்யுருகச் சொன்ன சாமி அண்ணாவை இன்னும் இன்னும் எல்லோருக்கும் பிடித்துப் போனது.
ஐயப்ப பக்தி என்றில்லை... எந்தக் கடவுளிடத்தில் பக்தி கொண்டிருந்தாலும் அந்த பக்தி செய்யும் முதல் லீலை, அந்த பக்தியால் கிடைக்கும் முதல் பலன்... கர்வம் ஒழிவது. கர்வம்தான் முதல் சத்ரு. நம் வாழ்க்கைக்குத் தடைக்கல்லாக இருக்கும் மோசமான எதிரி. கர்வம் தொலையத் தொலைய, கடவுளை நோக்கி நாம் நகர்கிறோம். இன்னும் சொல்லப்போனால், கடவுளே நம்மை நோக்கி நகர்ந்து வருகிறார்; வருவார்.
பக்தியைப் பிடிப்போம்; கர்வம் அழிப்போம். ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!
- ஐயன் வருவான்
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
6 hours ago
ஆன்மிகம்
6 hours ago
ஆன்மிகம்
6 hours ago
ஆன்மிகம்
8 hours ago
ஆன்மிகம்
21 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago