குருவே... யோகி ராமா..! 17: புதுச்சேரி தந்த மகான்

By வி. ராம்ஜி

பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்

அவர்... மிகச்சிறந்த இலக்கியவாதியா. ஆமாம். ஏராளமான புத்தகங்களைப் படித்தவர்.

அவர்... எழுத்தாளரா. ஆமாம் . நிறைய நூல்களைப் படைத்திருக்கிறார்.

அதுமட்டுமா. பத்திரிகையாளராகப் பணியாற்றியிருக்கிறார். தன் கட்டுரைகளால் மக்களின் மனங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அவர் படித்த இலக்கியத்தாலும் படைத்த எழுத்துகளாலும் செய்த பத்திரிகைப் பணிகளாலும் அவரை மக்களால் அறியப்பட்டார். அவர்... நேர்மையானவர். உண்மையானவர். சத்தியமே வாழ்க்கை எனக் கொண்டவர். இதனால் மக்கள் அவரை மரியாதையுடன் பார்த்தார்கள். பார்க்கும் போதெல்லாம் வணக்கம் சொன்னார்கள்.

இவை மட்டுமின்றி, அவரின் இன்னொரு செயல்பாடும் மக்களிடையே மிகப்பெரிய எழுச்சியையும் மலர்ச்சியையும் தந்திருந்தது. அவர்களுக்குள் நல்லுணர்வை விதைத்திருந்தது. அதனால் அவர் சொல்லைக் கேட்டு, மிகப்பெரிய கூட்டம் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டது.

ஆமாம்... அவரும் சுதந்திரப் போராட்ட வீரர்தான். இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக அரும்பாடு பட்ட தலைவர்களில் ஒருவர்தான். எல்லாவற்றுக்கும் மேலாக தன்னை அறிவதிலும் ஆண்டவனை நெருங்குவதிலும் அளப்பரிய ஆனந்தம் கொண்டவர். மக்களுக்குச் செய்யும் சேவையிலும் அவர்களிடம் காட்டுகிற பேரன்பிலும் இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்து வாழ்ந்தவர். அவர்... சுவாமி அரவிந்தர்.

சுதந்திரப் போராட்ட வீரரான அரவிந்தர், சுதந்திரத்துக்காப் போராடிய அரவிந்தர், 1872ம் வருடம் ஆகஸ்ட் 15ம் தேதி பிறந்தார். அதாவது பின்னாளில் சுதந்திரத்துக்காகப் போராடுபவன் , சுதந்திர நாளைக் கொண்டாடவேண்டும் என்றெல்லாம் முழக்கமிட்டவன், பின்னாளில் கிடைத்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத் தேதியில், முன்பே பிறந்திருந்தார் என்பது ஆச்சர்யமான ஒற்றுமை.

அரவிந்த் அக்ராய்ட் கோஷ் என்பதே இயற்பெயர். சிறுவயதில் இருந்தே ஆங்கிலத்தை ஈடுபாட்டுடன் கற்றறிந்தார். ஹிந்துஸ்தானி இசையும் கற்றுக் கொண்டார். படிப்பும் இசையுமாகவே கழிந்தன பால்ய காலங்கள்.

டார்ஜிலிங்கில் உள்ள லோரட்டோ கான்வெண்ட்டில்... அயர்லாந்து கன்னித்துறவியர் நடத்திவந்த பள்ளியில் படிப்பு. அதையடுத்து இங்கிலாந்திலும் லண்டனிலும் மேற்படிப்புகளைத் தொடர்ந்தார். நாட்டை விட்டு எத்தனையோ நாடுகள் சென்றாலும் இந்திய மண் மீதான காதலும் பக்தியும் பிரியமும் அதிகரித்தபடியே இருந்தது. ,

லத்தின், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் என பல மொழிகள் கற்றூக் கொண்டாலும் நாடு கடந்து, மொழி கள் கடந்து, நம் கலாச்சாரத்தின் மீது மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் எள்ளளவும் மாறவோ குறையவோ இல்லை.

கடவுளை வணங்குவதும் தேசத்தின் மீது பிரியமாக இருப்பதும் ஒன்றே எனச் சொல்லிவந்தார். இரண்டுமே சுதந்திர உணர்வை, மனதுக்குள் மிகப்பெரிய விடுதலையைத் தரக்கூடியவை என்பதை முழுமையாக உணர்ந்திருந்தார். அதை மக்களிடம் விதைத்து வந்தார்.

பரோடா சமஸ்தானத்தின் மன்னர் லண்டன் வந்தபோது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அரவிந்தரின் முகப்பொலிவிலும் தேஜஸிலும் வியந்து போன மன்னர், அவரை தன் சமஸ்தானப் பணிக்கு வரும்படி அழைக்கும்படி விடுத்தார். சுதந்திரப் போராட்டத்துக்கு இந்த வேலையும் அவசியம்தான், இந்தியா வருவது நல்லதுக்குத்தான் என்பதாக உணர்ந்த அரவிந்தர், சம்மதித்தார்.

அதன்படி, பரோடா வந்தவர், தனது ஒழுக்க குணத்தால் மன்னரை இன்னும் ஈர்த்தார். நேர்மையான நடத்தைகளால், இன்னும் அவர் மீது மரியாதை கூடியது மன்னருக்கு. பரோடா கல்லூரிக்கு பேராசிரியராராக நியமிக்கப்பட்டார் அரவிந்தர்.

அங்கே... அந்த சமயத்தில் கிடைக்கும் நேரங்களில் தியானம் செய்து கொண்டிருக்கத் தொடங்கினார். கடவுள் தேடல் குறித்த சிந்தனைகள் அப்போது அவருக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தன. தியானமும், யோகாவும் , கடவுள் தேடல் சிந்தனையும் சேர்ந்து அவருக்குள் கனிவை ஏற்படுத்தி இருந்தன.

எது உகந்தது என்று நினைக்கிறோமோ... அதையே உகந்தது அல்ல எனும் முடிவுக்கு ஒருகட்டத்தில் வருவோம். இதுவும் இயல்புதான். மனித வாழ்வில் இயல்பான விஷயம்தான். அரவிந்தரும் பரோடா சமஸ்தானத் தொடர்பிலான பணிகளை விரும்பித்தான் வந்தார். ஆனால் அவரால் போராட்டத்தில் பங்கெடுக்க முடியவில்லை. ஏதோ கையை கட்டிப் போட்டிருப்பதாக உணர்ந்தார். வேலையை உதறினார். போராட்டம் இன்னும் வலுத்தது.

சிறையில்... அவருக்குள் சகிப்புத் தன்மை உருவானது. ஓய்வு நேரங்களில், புத்தகங்கள் படிப்பதன் மூலம் கழித்த அரவிந்தர், அந்தப் புத்தகங்களை, ஆன்மிக உணர்வுடன் அணுகினார். இந்தச் சிறைத் தண்டனைக் காலம்... அரவிந்தரை பக்குவப்படுத்தியது. நிதானப்படுத்தியது. தெளிவைக் கொடுத்தது.

பகவத் கீதையும் வேதங்களும் உபநிஷத்துகளும் இடைவிடாத யோக தியானங்களும் அரவிந்தரை, உள்ளுக்குள் ஆழ்ந்து போக வைத்தன. உள்ளிருப்பதும் வெளியிருப்பதும் உணருவது மிக எளிதாக இருந்தது அரவிந்தருக்கு!

‘இந்தச் சிறை, தண்டனை என்பதெல்லாம் இறைவன் என்னைப் பக்குவப்படுத்தச் செய்த வழிகள். அவன் செய்த ஏற்பாடுகள்தான் இவை. வாழ்வின் எல்லா பக்கங்களையும் அறிவதற்கும் மேடு பள்ளங்களை உணருவதற்கும் பகவான் எனக்கு இந்த சிறையின் மூலமாகக் கற்றுக் கொடுத்திருக்கிறார்’ என்று பின்னாளில் சுவாமி அரவிந்தர் அருளியிருக்கிறார்.

‘சிறையில் யாரைப் பார்த்தாலும் எதைப் பார்த்தாலும் எனக்கு பகவான் கண்ணனே தெரிந்தான்’ என்கிறார் சுவாமி அரவிந்தர். சுவாமி விவேகானந்தர் , சூட்சும ரூபமாக சிறையில் தன் அறைக்குள் வந்ததை உணர்ந்து சிலிர்த்ததை விவரிக்கிறார் அரவிந்தர்.

அந்த அரவிந்தரை.... சுவாமி அரவிந்தரை, புதுச்சேரியில் உள்ள அற்புத மகானைப் பற்றிய நினைவுகளில் மூழ்கியிருந்தார் ராம்சுரத் குன்வர்.

ரயில்... அவர் மனஓட்டத்துக்குத் தக்கபடி, வேகமெடுத்துப் போய்க் கொண்டிருந்தது/

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெயகுரு ராயா.

-ராம்ராம் ஜெய்ராம்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம் படிப்பதற்கு...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

6 hours ago

ஆன்மிகம்

11 hours ago

ஆன்மிகம்

18 hours ago

ஆன்மிகம்

18 hours ago

ஆன்மிகம்

18 hours ago

ஆன்மிகம்

20 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்