தாந்தோணிமலை கோயிலில் மாசி மக தெப்பத் திருவிழா

By செய்திப்பிரிவு

கரூர்: தாந்தோணிமலை வெங்கடரமண சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா நேற்று நடைபெற்றது.

கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் மாசி மகத் திருவிழா பிப்.14-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, பிப்.16-ம் தேதி கொடியேற்றம், பிப்.22-ம் தேதி திருக்கல்யாண உற்சவம், பிப்.24-ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. நேற்று முன்தினம் அமராவதி ஆற்றில் தீர்த்த வாரி, கெஜலட்சுமி வாகன புறப்பாடு, கொடியிறக்கம் நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று தெப்பத் திருவிழா நடைபெற்றது. சீதேவி, பூ தேவியுடன் வெங்கடரமண சுவாமி தெப்பத்தில் எழுந்தருளி, குளத்தை 3 முறை வலம் வந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மார்ச் 4-ம் தேதி புஷ்ப யாகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

11 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்