புதுச்சேரி வைத்திக்குப்பம், திருக்காஞ்சியில் மாசிமக தீர்த்தவாரி - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரி வைத்திக்குப்பம், திருக்காஞ்சி உள்ளிட்ட இடங்களில் மாசிமகத் தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஆளுநர் தமிழிசை, அமைச்சர் தேனீ ஜெயக்குமார் உள்ளிட்டோர் இந்தமாசிமக வழிபாட்டில் பங்கேற்றனர்.

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அடுத்த திருக்காஞ்சி பகுதியில் ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் திருத்தலம் அமைந்துள்ளது. இது, மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலமாகும். சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இத்தலத்தின் மற்றொரு பகுதியில் காசிவிஸ்நாதர் திருத்தலமும் உள்ளது. மாசிமக தீர்த்தவாரியின் போது இங்கு ஏராளமான கோயில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் எழுந்தருள்வது வழக்கம். ஏராளமானோர் வருகை தந்து, தங்களின் முன்னோர் ஆன்மா சாந்தி அடைய இங்குள்ள சங்கரா பரணி ஆற்றங்கரையில் புண்ணிய தர்பணம் கொடுப்பதும் உண்டு.

இந்தாண்டுக்கான மாசி மகபிரமோற்சவம் கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான 9-ம் நாள் தேர் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிரசித்தி பெற்ற மாசிமக தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது. இதையொட்டி திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் தலத்தில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டும், விதவிதமான தோற்றங்களிலும் ஊர்வலமாக வந்து அணிவகுத்து நின்று பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

இந்த தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பங்கேற்று உற்சவ மூர்த்திகளை தரிசனம் செய்தனர். பலர் சங்கராபரணி ஆற்றங்கரையில் தங்களின் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். மாசி மகத் தீர்த்த வாரியையொட்டி, பல இடங்களில் அன்னதானமும் வழங்கப் பட்டன. போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் சிறப்பு அதிகாரி மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

கடற்கரைகளில் தீர்த்தவாரி: இதனிடையே திருக்காஞ்சி தீர்த்தவாரி நிகழ்வில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை, அமைச்சர் தேனீ ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் கோயிலில், ரூ.10 கோடி செலவில் 108 அடி உயரத்தில் ஐந்து முக சதாசிவன் சிலை நிறுவப்பட உள்ளது. இது மூன்று மாடி தளத்துடன் கொண்ட கட்டிடமாக அமைய உள்ளது. இதனுடைய மாதிரி கட்டிட வடிவமைப்பு கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதனை ஆளுநர் தமிழிசை பார்வையிட்டு, சிவன் சிலை எவ்வாறு அமைய உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து 108 பக்தர்களுக்கு எள்ளுருண்டைகளை ஆளுநர் தமிழிசை வழங்கினார். இதேபோல் வைத்திக்குப்பம் கடற்கரை, வீராம்பட்டினம், நல்லவாடு வடக்கு உள்ளிட்ட கடற்கரைகளிலும் மாசிமகத் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இங்கும் ஆளுநர் தமிழிசை கலந்து கொண்டு, வழிபட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்