பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான மயான பூஜை நேற்று நடைபெற்றது. இதையொட்டி, நேற்று முன்தினம் நள்ளிரவு மாசாணியம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
பின்னர் மயான அருளாளி அருண், தலைமை முறைதாரர் மனோகர் உட்பட 10-க்கும் மேற்பட்ட அருளாளிகள், ஆழியாறு ஆற்றங்கரையில் உள்ள மயானத்துக்கு அம்மனின் சூலத்தை ஏந்திச் சென்றனர்.
மயான மண்ணால் மாசாணியம்மனின் உருவம் சயன கோலத்தில் உருவாக்கப்பட்டது. அதிகாலை 2 மணிக்கு மேளதாளங்கள் முழங்க அம்மனின் திருவுருவத்தை மறைத்திருந்த திரை விலக்கப்பட்டது. அம்மனின் மண் உருவத்தை மயான அருளாளி அருண் சிதைத்து, எலும்பைக் கவ்வியபடி பட்டுச்சேலையில் பிடி மண்ணை எடுத்தார்.
பின்னர் மயான பூஜை 4 மணிக்கு நிறைவடைந்தது. வால்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளர் நிதி தலைமையில் போலீஸார் மற்றும் ஊர்க்காவல் படையினர் 200-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மயான பூஜையையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து மாசாணியம்மன் கோயிலுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப் பட்டன.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
8 hours ago
ஆன்மிகம்
14 hours ago
ஆன்மிகம்
17 hours ago
ஆன்மிகம்
18 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago