மாசி மக தீர்த்தவாரிக்கு பக்தர்கள் புனித நீராட கும்பகோணம் காவிரி ஆற்றில் நீர் திறக்கக் கோரிக்கை

By செய்திப்பிரிவு

கும்பகோணம்: ஆண்டுதோறும் மாசி மகத்தன்று கும்பகோணத்தில் உள்ள 12 சிவன் கோயில்கள் மற்றும் 4 பெருமாள் கோயில்களிலும் கொடியேற்றம், ஓலைச் சப்பரம், திருக்கல்யாணம், தேரோட்டம் மற்றும் தீர்த்தவாரி நடைபெறும்.

நிகழாண்டு இந்த விழா இன்று ( பிப்.15 ) கொடியேற்றத்துடன் தொடங்கி, பிப்.24-ம் தேதி தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. தீர்த்தவாரி நாளில் மகாமக குளம், பொற்றாமரை குளம் ஆகியவற்றில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் புனிதநீராடி விட்டு, அதைத் தொடர்ந்து காவிரி ஆற்றிலும் புனித நீராடுவர். பின்னர், கோயில்களில் வழிபாடு செய்வர். இந்நிலையில், தற்போது காவிரி ஆற்றில் தேங்கியுள்ள நீர், அசுத்தமாக உள்ளது. எனவே, தீர்த்தவாரி அன்று புனிதநீராட வசதியாக காவிரியில் நீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்புப் பிரிவு மாநிலத் தலைவர் ராம.நிரஞ்சன், கும்பகோணம் கோட்டாட்சியரிடம் நேற்று அளித்த மனு: மாசிமக விழாவையொட்டி, மகாமக குளத்தின் கரைகளையும், நீரையும் சுத்தப்படுத்த வேண்டும். கோயில்களில் இருந்து வரும் சுவாமிகளை, மாலை 6 மணி வரை மகாமக குளக்கரையிலேயே நிறுத்துவதற்கும், தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு திரு நீறு பிரசாதம் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE