பத்மாவதி தாயார் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

By என். மகேஷ்குமார்

திருப்பதி: ஆந்திர மாநிலம், திருப்பதி அருகில்உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரும் 16-ம்தேதி, ரதசப்தமி விழா வெகு சிறப்பாக நடத்தப்பட உள்ளது. இதையொட்டி, ஆகம விதிகளின்படி, நேற்று காலை 6.30 மணி முதல் 9 மணி வரை கோயில் முழுவதும் வாசனை திரவியங்களால் அதிகாரிகள், அர்ச்சகர்கள் சுத்தம் செய்தனர்.

இதனையே ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி என்று அழைத்து வருகின்றனர். இதனால் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை போன்ற சேவைகள் ரத்து செய்யப்பட்டது. காலை 9 மணிக்கு பிறகே பக்தர்கள் தாயாரை தரிசிக்க அனுமதித்தனர்.

வரும் 16-ம் தேதி ரதசப்தமியை முன்னிட்டு, தாயார் கோயிலில் காலை 7.15 முதல் 8.15 வரை சூரிய பிரபை வாகனத்தில் பத்மாவதி தாயார் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இதனை தொடர்ந்து, 8.45 முதல் 9.45 வரை அன்ன வாகனம், 10.15 மணி முதல் 11.15 மணி வரை அஸ்வ வாகனம், 11.45 முதல் 12.45 மணி வரை கருட வாகன சேவையும் நடைபெறும். இதன் பின்னர் மதியம் 1.15 மணி முதல் 2.15 மணி வரை சின்ன சேஷ வாகனத்தில் தாயார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

இதனை தொடர்ந்து மதியம் 3.30 மணி முதல் 4.30 மணி வரை சிறப்பு திருமஞ்சன சேவை நடக்கும். இதனை தொடர்ந்து மாலை 6 மணி முதல் 7 மணி வரை சந்திரபிரபை வாகனத்திலும், இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை கஜ வாகனத்திலும் தாயார் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். முன்னதாக காலை 6 மணி முதல் 7 மணி வரை திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் மாட வீதிகளில் சூரியநாராயணர் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

ரதசப்தமியை முன்னிட்டு வரும்16-ம் தேதி தாயார் கோயிலில் அபிஷேகத்துக்கு பின்னர் நடத்தப்படும் தரிசனம், லட்சுமி பூஜை, ஆர்ஜித கல்யாண உற்சவம், குங்குமார்ச்சனை, பிரேக் தரிசனம், ஊஞ்சல் சேவை மற்றும் வேதசீர்வச்சனம் போன்றவை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக திரு மலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

12 hours ago

ஆன்மிகம்

14 hours ago

ஆன்மிகம்

20 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்