லூர்து அன்னை ஆலய விழா கூட்டுத் திருப்பலி

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலய பெருவிழா கூட்டுத் திருப்பலி நேற்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி லூர்தம்மாள் புரத்தில் அமைந்துள்ள புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் ஜெப மாலை, திருப்பலி, மறையுறை, நற்கருணை ஆசீர் போன்ற வழிபாடுகள் நடை பெற்றன. திருவிழாவின் 9-ம் நாளான நேற்று முன்தினம் மாலை திருவிழா சிறப்பு மாலை ஆராதனை மறை மாவட்ட முன்னாள் முதன்மை குரு ச.தே.செல்வ ராஜ் தலைமையில் நடைபெற்றது.

கீழவைப்பார் பங்குத்தந்தை அந்தோணி ஜெகதீஷ் மறையுரை நிகழ்த்தினார். 10-ம் நாள் திருவிழாவான நேற்று காலை பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. தூத்துக்குடி மறைவட்ட முதன்மை குரு ஜான் பென்சன் தலைமையேற்க, சிறுமலர் குறுமட ஆன்மிகத் தந்தை சகாய ஜோசப், ஆலய பங்குத் தந்தை ஆன்றனி புருனோ, ரத்தினபுரம் பங்குத்தந்தை இருதய ராஜ், திரேஸ்புரம் உதவி பங்குத் தந்தை அலெக்ஸ், கப்புச்சின் சபை துறவி இருதய ராஜ் ஆகியோர் ஆடம்பர கூட்டு திருப்பலியை நிறைவேற்றினர்.

சிறுவர், சிறுமியருக்கு புதுநன்மை வழங்கப்பட்டது. திரளான இறைமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாலையில் ஜெபமாலை திவ்ய நற்கருணை ஆசிருடன் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிகழ்வுகள் நிறைவுற்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE