குருவே... யோகி ராமா! 43: ராம மந்திரம்..!

By வி. ராம்ஜி

பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்

குறிக்கோள், இலக்கு, லட்சியம், எதிர்காலத் திட்டம் என்றெல்லாம் பல பெயர்கள், ஒரே விஷயத்தைச் சொல்லுகின்றன. கொள்கை, கோட்பாடு, குணாதிசயம் என்று இன்னும் பல விஷயங்களை லட்சியத்துடனும் இலக்குகளுக்குள்ளேயும் குறிக்கோளாகவும் எதிர்காலத் திட்டமாகவும் சேர்த்தே சொல்லலாம்!

எது குறிக்கோள் என்பது ஒருபக்கம். இலக்கு என்ன என்பது அடுத்த கேள்வி. லட்சியம் எதுகுறித்து என்பதெல்லாம் அடுத்தடுத்த விஷயங்கள். எதிர்காலத் திட்டம் என்ன என்பது அவரவர் சம்பந்தப்பட்ட தனித்ததான எண்ணங்கள். இங்கே... முதல் சந்தோஷம்... இப்படி, குறிக்கோளுடன், இலக்கு நிர்ணயித்து, லட்சியப் பாதையை நோக்கி, எதிர்காலத்திட்டத்தை கருத்தில் கொண்டு இருக்கிறோம் என்பதுதான்!

இப்போது அடுத்ததாக, குறிக்கோள் குறித்துப் பார்க்கலாம். எதை லட்சியமாக எடுத்துக் கொண்டிருக்கிறோம், எடுத்திருக்கிறார் என்று ஆராயலாம். லட்சியம் குறித்து விவாதிக்கலாம். எதிர்காலத் திட்டம் என்ன என்றும் அந்தத் திட்டத்தை நோக்கிச் செல்வதற்கான திட்டங்கள் என்ன என்றெல்லாம் யோசிக்கலாம்.

அடுத்து இங்கே அந்தக் குறிக்கோள் என்ன, லட்சியம் எப்படிப்பட்டது, இலக்கு நல்லதானதுதானா என்றெல்லாம் சிந்தித்துச் செயல்பட வேண்டும். முதலில் சிந்தித்து, தேவைதானா என்றெல்லாம் பார்க்கவேண்டும்.

பப்பா ராம்தாஸ் சுவாமிகள், தன் தந்தையார் சொல்லிக் கொடுத்த ‘ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய ஜெய ராம்’ எனும் வாசகத்தை, மந்திரம் போல் சொல்லிக் கொண்டே இருந்தார். இதனால் உள்ளே ஏற்பட்ட மாற்றமும் தெளிவும் அவரை சுவாமிகள் என்று எல்லோரும் கொண்டாடும் நிலைக்கு உயர்த்தியது.

பிறகு இல்லறத்தைத் துறந்தார். ஸ்ரீரங்கம் தலத்துக்கு வந்தார். காவிரியில் நீராடினார். முழுவதுமாக அனைத்தில் இருந்தும் விலகினார். தன் வாழ்வை இறைப் பணிக்காகவும் இறைநாமம் ஜபிப்பதற்காகவுமே அர்ப்பணித்தார். ஸ்ரீராமருக்கு தாஸராகவே திகழ்ந்தார். இதனால் அவரை ராம்தாஸ் சுவாமிகள் என்றே அழைத்தனர்.

அந்த சமயத்தில், மனதுக்குள் சில சங்கல்பங்களை எடுத்துக் கொண்டார் பப்பா ராம்தாஸ் சுவாமிகள்.

இந்த என்னுடைய வாழ்க்கை, என்னுடையது இல்லை. என்னுடைய வாழ்வு, ராம தியானத்திற்காக அமைந்தது. ஸ்ரீராமபிரானின் சேவைக்காகவே இந்த என் வாழ்வை அர்ப்பணிக்கிறேன்.

முழுக்க முழுக்க, என்னுடைய இந்தப் பிறவியை, பிரம்மச்சர்யத்துடன் அனுஷ்டிக்கிறேன். எனக்கு எதிரே உள்ள பெண்கள் அனைவரையும், என்னைப் பெற்றெடுத்த தாயாராகவே பாவிப்பேன். உலகின் மகாசக்தி பெண்கள்தான். அவர்களை என் அன்னைக்கு நிகராகவே பார்ப்பேன்.

யாரிடமும் எதையும் கேட்டுப் பெறமாட்டேன். அப்படி நான் யாசகம் கேட்பது, உணவாக மட்டுமே இருக்கும். அதாவது பிச்சை எடுத்துச் சாப்பிடுவேன். அல்லது பிறர் அவர்களாகவே தருவதைச் சாப்பிடுவேன்.

இப்படியான லட்சியங்களுடன், குறிக்கோளுடன், இலக்குடன், கொள்கையுடன் வாழ்ந்தார் பப்பா ராம்தாஸ் சுவாமிகள்.

ராமபிரானுக்கு அடியாராக, அடியார்கள் அனைவரையும் நேசிக்கும் அடியாராகவே வாழ்ந்தார். கையில் காசோ பணமோ இல்லை. எங்கே செல்ல வேண்டும், எங்கு தங்க வேண்டும், என்ன சாப்பாடெல்லாம் கிடைக்கும் என்று ஒருபோதும் யோசித்ததே இல்லை.

ராமேஸ்வரம் எனும் புண்ணிய பூமிக்குச் சென்றார். அங்கே நீராடினார். சுவாமி தரிசனம் செய்தார். அங்கிருந்து பல புண்ணியத் தலங்களுக்கெல்லாம் சென்றார். தவமிருந்தார். கேதார்நாத் வரை அவரின் பயணம் இருந்தது.

அவருக்குப் பசி தெரியவில்லை. கிடைத்த உணவும் ருசியா என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. சுள்ளென்றூ சுட்டெரிக்கும் வெயிலையெல்லாம் அவர் பொருட்படுத்தவே இல்லை. கடும் குளிரின் தாக்கத்தில் சுருங்கிப் போய்விடவில்லை. எல்லா நேரங்களிலும், ராம நாமமே உள்ளே ஓடிக்கொண்டிருந்தது. ‘ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய ஜெய ராம்’ என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

திருவண்ணாமலை எனும் மகான்களின் பூமிக்கு வந்தார். பகவான் ரமண மகரிஷியைத் தரிசித்தார். அவரிடம் தீட்சை பெற்றுக் கொண்டார். இங்கே உள்ள இடங்கள் பலவற்றிலும் அமர்ந்து, தியானத்தில் மூழ்கினார். அங்கே கிடைத்தது ராம தரிசனம்!

உயிருள்ளவையும் உயிரற்றவையும் என எல்லாமே ஸ்ரீராமபிரானாகவே காட்சி அளித்தன. அந்த அகண்ட தரிசனம், அகக்கண்களைத் திறந்தன. இன்னும் இன்னும் உள்ளே போகமுடிந்தது. தன்னை யார் என்றும் எது என்றுமாக உணர்ந்து கொண்டார்.

நல்லது கெட்டது தெரியாத குழந்தையின் கொண்டாட்ட நிலை, உலகின் சம்பவங்கள் ஏதும் தெரியாத பைத்தியக்காரரின் ஏதுமற்ற நிலை, மகா யோகியின் தெளிந்த, சலனமே இல்லாத நிலை என மூன்றுக்குள்ளேயும் மூழ்கி எழுந்தார் பப்பா ராம்தாஸ் சுவாமிகள்.

மங்களூருக்கு அருகில் கத்ரி எனும் திருத்தலம். அங்கே பஞ்சபாண்டவர்கள் குகை என்றிருக்கிறது. அங்கே சென்று, அந்தக் குகைக்குள் நுழைந்து, ‘ஸ்ரீராம் ஜெய்ராம், ஜெய ஜெய ராம்’ எனும் மந்திரத்தில் மூழ்கினார்.

திருவண்ணாமலையில் தியானத்தில் கிடைத்தது போல், உணர்ந்தது போல்... அங்கேயும் அந்த பஞ்சபாண்டவர் குகையிலும் ஒன்று நிகழ்ந்தது.

அதாவது... நா அசையாமல், உள்ளுக்குள் சொல்லிக் கொண்டிருந்த மந்திரம், சட்டென்று நின்றது.

ராம்சுரத் குன்வர் ஆஸ்ரமத்துக்கு வந்து தரிசித்து வேண்டிய தருணத்தில், ‘ஸ்ரீராம் ஜெய்ராம், ஜெய ஜெயராம்’ எனும் மந்திரத்தைச் சொல்லும்படி அருளினார்.

அந்த மந்திரத்தை, பப்பா ராம்தாஸ் சுவாமிகள் சொன்னபோதுதான், சொல்லிக் கொண்டிருந்த போதுதான், பஞ்சபாண்டவர் குகையில், அந்த மந்திரம் தானாகவே நின்றது.

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெயகுரு ராயா!

- ராம்ராம் ஜெயராம்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம் படிப்பதற்கு...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

6 hours ago

ஆன்மிகம்

8 hours ago

ஆன்மிகம்

19 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

மேலும்