பழநி: அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநிதண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து லட்சக்கணக் கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து, முருகனை வழிபட்டுச் சென்றனர்.
தைப்பூசத் திருவிழா முடிவடைந்த பின்னரும் பாதயாத்திரை வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறையவில்லை. அவ்வாறு வரும் பக்தர்களில், பழநி மலைக் கோயிலில் ஒரு நாள் இரவு தங்கி வழிபட்டுச் செல்லும் உரிமை பெற்றவர்கள் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த பருவ தராஜகுல திருவிழாக் குழுவினர்.
இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழாவையொட்டி 366-ம் ஆண்டாக எடப்பாடியில் இருந்து காவடி சுமந்தபடி பாத யாத்திரையாக புறப்பட்டவர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் பழநிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் இன்று (பிப். 1) இரவு பழநி மலைக் கோயிலில் தங்கி, பல்வேறு வழிபாடுகளை நடத்துவார்கள்.
இக்குழுவில் வரும் பக்தர்களுக்கு வழங்கடன் கணக்கில் பஞ்சாமிர்தத்தை அவர்களே தயார் செய்கின்றனர். அதற்காக, எடப்பாடியைச் சேர்ந்த பஞ்சாமிர்த தயாரிப்புக் குழுவினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழநி மலைக் கோயில் மற்றும் அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் தங்கி, பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இவர்கள் 10 டன் மலைவாழைப் பழம், அதற்குத் தேவையான அளவு நாட்டு சர்க்கரை, பேரீச்சம் பழம், கற்கண்டு, நெய், ஏலக்காய், தேன் ஆகியவற்றைப் பயன்படுத்தி 15 டன் பஞ்சாமிர்தம் தயாரித்துள்ளனர். இன்று அதில் ஒரு பகுதியை தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வழிபாடு நடத்த உள்ளனர். தொடர்ந்து, பஞ்சாமிர்தத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க உள்ளனர். மேலும், இக்குழுவினர் இன்று இரவு மலைக் கோயிலில் தங்கி சுவாமியை வழிபட உள்ளனர்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
11 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago