கிறிஸ்தவ ஆலயங்களில் திருக்காட்சி பெருவிழா - பொங்கலிட்டு வழிபாடு @ புதுக்கோட்டை

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: குழந்தை இயேசு பிறந்ததும் அவரை காண்பதற்காக புனித கஸ்பார், புனித மெல்க்யூர், புனித பல்த்தசார் ஆகிய 3 அரசர்கள் சென்றதை நினைவூட்டும் வகையில் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வீடுகளில் நேற்று திருக்காட்சி பெருவிழா நடைபெற்றது.

இதில், புதுக்கோட்டை மாவட்டத் தில் பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் பொங்கலிட்டு வழிபட்டனர். மணமேல்குடி அருகே உள்ள மூவனூர் தூய அடைக்கல அன்னை ஆலயத்தில் 5 கிராம மக்கள் பொங்கலிட்டனர். பின்னர், மாடு, கன்றுக்குட்டிகளை ஓட்டி வந்து, கூட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். இதே போன்று, கோட்டைக்காட்டில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் ஜல்லிக்கட்டு காளைகளை ஓட்டி வந்து வழிபாடு நடத்தினர்.

பின்னர், 15-க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்து விட்டனர். கூட்டத்துக்குள் காளைகள் புகுந்து முட்டியதில் 5-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவலின் பேரில் வடகாடு போலீஸார் சென்று, காளைகள் அவிழ்க்கப் படுவதை தடுத்து நிறுத்திவிட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

8 hours ago

ஆன்மிகம்

21 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்