12 ஆண்டுகளுக்குப் பின் திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர்கள் நியமனம்

By செய்திப்பிரிவு

மதுரை: சுமார் 12 ஆண்டுகளுக்குப்பின் மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர்களாக 5 பேரை நியமனம் செய்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடாக மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் திகழ்கிறது. இக்கோயிலில் கடந்த 12 ஆண்டுகளாக அறங்காவலர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்து கூடுதல் தலைமைச்செயலாளர் க.மணிவாசன் ஜன.3-ம் தேதியிட்ட அரசாணை மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதில், மதுரை வடக்குமாசி வீதி நா.மணிச்செல்வன், ஆனையூர் டி.எம்.பொம்மதேவன், நாகமலை புதுக்கோட்டை ப.சத்யபிரியா, பாண்டியன்நகர் வி.சண்முகசுந்தரம், அக்ரிணி ஆண்டாள்புரம் தி.ராமையா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒரு மாதத்திற்குள் பதவியேற்கவும், பதவியேற்ற காலத்திலிருந்து 2 ஆண்டுகள் பதவி வகிப்பர் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

23 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

மேலும்