கோட்டை அழகிரிநாதர் கோயில் சொர்க்கவாசலுக்கு திருக்காப்பு

By செய்திப்பிரிவு

சேலம்: சேலம் கோட்டை அழகிரிநாதர் கோயிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி திறக்கப்பட்ட சொர்க்க வாசலுக்கு,10 நாட்களுக்குப் பின்னர், சிறப்பு பூஜை நடத்தி நேற்று திருக்காப்பு செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை அழகிரி நாதர் கோயிலில், வைகுண்ட ஏகாதசி உற்சவத்தையொட்டி, கடந்த 23-ம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில், சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பல ஆயிரம் பேர் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், சொர்க்க வாசலை தரிசித்து, அதன் வழியாக வெளியேறினர்.

சொர்க்க வாசல் திறப்பு உற்சவத்தைத் தொடர்ந்து, அன்று மாலை முதல் இராப்பத்து உற்சவம் தொடங்கி. நேற்று முன்தினம் வரை சொர்க்க வாசல் நடை திறந்து இருந்தது. மேலும், நேற்று முன்தினம் ஆழ்வார் மோட்சம் மற்றும் சுவாமி திருவீதி புறப்பாடு ஆகியவை நடைபெற்றன. இந்நிலையில், 11நாட்களாக திறக்கப்பட்டிருந்த சொர்க்க வாசலுக்கு, நேற்று மாலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தீபாராதனைக்குப் பின்னர் திருக்காப்பு செய்யப்பட்டது. இதில், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE