ஏழுமலையானை தரிசனம் செய்ய மார்ச் மாதத்திற்கான முன்பதிவு இன்று தொடக்கம்

By என். மகேஷ்குமார்

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் வரும் 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசனம் உட்பட பல்வேறு ஆர்ஜித சேவைகளுக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி மார்ச் மாத ஆர்ஜித சேவைகளுக்காக, எலக்ட்ரானிக் குலுக்கல் முறையில் இன்று காலை 10 மணி முதல் 20-ம் தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் தங்களின் ஆதார் அட்டைஎண் மூலம் முன் பதிவு செய்துகொள்ளலாம். அப்படி முன்பதிவு செய்து கொண்டவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அவர்களுடைய செல்போனுக்கு குறுந் தகவல் அனுப்பப்படும்.

அதன் பிறகு சம்மந்தப்பட்ட பக்தர்கள் ஆன்லைனில் பணம்செலுத்தி அதற்கான டிக்கெட்களை பெற்றுக்கொள்ளலாம். ஏழுமலையான் கோயில் தெப்போற்சவத்திற்கு வரும் 21-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட்கள் வழங்கப்படும். இந்த சேவை டிக்கெட்களை தேவஸ்தானத்தின் ttdevasthanams .ap.gov.in என்கிற இணைய தளத்தில் மட்டுமே பக்தர்கள் முன் பதிவு செய்து கொள்ளவேண்டுமென தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

3 hours ago

ஆன்மிகம்

5 hours ago

ஆன்மிகம்

11 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

மேலும்