திருவண்ணாமலை: தனுர் மாத உற்சவத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் பருவத மலையில் லட்சக்கணக் கான பக்தர்கள் நேற்று கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மகா தேவமங்கலம் கிராமத்தில் 4,560 அடி உயரப் பருவத மலையில் பிரம்மராம்பிகை சமேத மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குப் பவுர்ணமி நாள் உட்பட அனைத்து நாட்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், மலையேறி சென்று சுவாமியை தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில் தனுர் மாத (மார்கழி மாதம் முதல் தேதி) உற்சவத்தையொட்டி மலையடிவாரத்தில் உள்ள கோயில் மாதி மங்கலத்தில் கரை கண்டேஸ்வரர் கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நாளில், பருவதமலை மீது ஏறிச் செல்லாமல், சுமார் 26 கி.மீ., தொலைவு கொண்ட பருவத மலையை பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர்.
தென் மகாதேவமங்கலம் கிராமத்தில் தொடங்கி கடலாடி, பட்டியந்தல், காந்தபாளையம், வெள்ளம் தாங்கி ஈஸ்வரர் கோயில் வழியாக லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று இறை வனை வழிபட்டனர். நமச்சிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடி சென்றனர். அதி காலையில் தொடங்கிய பக்தர் களின் கிரிவலம் இரவு வரை நீடித்தது.
» ஏழுமலையானை தரிசனம் செய்ய மார்ச் மாதத்திற்கான முன்பதிவு இன்று தொடக்கம்
» சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா இன்று தொடக்கம்
கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித் துள்ளது. மேலும், பல இடங் களில் அன்னதானம் வழங்கப் பட்டது. அன்னதானத்தை சட்டப்பேரவை உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் தொடங்கி வைத்தார். உற்சவத்தை யொட்டி திருவண்ணா மலை, போளூர் பகுதியிலிருந்து சிறப்புப் பேருந்துகளும் இயக்கப் பட்டன.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago