திருப்பதியில் கிரிவலம் சாத்தியமில்லை: தேவஸ்தான அதிகாரி பதில்

By என்.மகேஷ்குமார்


திருமலை: திருப்பதி ஏழுமலையான் பக்தர்களிடம் தொலைபேசி மூலம் குறைகளை கேட்கும் நிகழ்ச்சி திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று நடைபெற்றது. தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி குறைகளை கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 24 பக்தர்கள் தேவஸ்தான அதிகாரியை தொடர்பு கொண்டு பேசினர். இதில் முக்கியமாக, ஆந்திர மாநிலம், சீபுருபல்லி பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவர், “திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அதேபோன்று, திருப்பதியிலும் ஏழுமலையான் பக்தர்களுக்காக கிரிவலம் ஏற்பாடு செய்யப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி பதில் அளிக்கையில், “இது நல்ல யோசனை தான் ஆனால், பூகோள ரீதியாக இங்கு கிரிவலம் செல்ல முடியாது. அதற்கு சாத்தியமில்லை. என்றாலும் திருமலையில் ஏழுமலையான் கோயிலை சுற்றிலும் உள்ள ரிங் ரோட்டில் பக்தர்கள் ‘மகா பிரதட்சணம்’ செய்யலாம்” என்று பதில் அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் லட்டின் தரம் குறித்து பேசிய சிலர், அதில் சர்க்கரையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினர். கண் தான வங்கி திறக்க ஏற்பாடு செய்யலாம் என ஆலோசனை வழங்கினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE