கோதவாடி குளத்தின் கரையில் 1008 தீபங்கள்

By செய்திப்பிரிவு

கிணத்துக் கடவு: கிணத்துக்கடவு ஒன்றியம் கோதவாடி கிராமத்தில் அமைந்துள்ள குளம், கடந்த 2021-ம் ஆண்டு தன்னார்வலர்கள் முயற்சியால் சீரமைக்கப்பட்டது.

இதனால் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்ட அணையிலிருந்து உபரி நீர் கோதவாடி குளத்துக்கு கொண்டு வரப்பட்டது. குளத்தை சீரமைத்தல், அறிவிப்பு பலகை வைத்தல், சீமை கருவேல மரங்கள் அகற்றல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் பின்னர் ஒவ்வோர் ஆண்டும் திருக்கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு கோதவாடி குளத்துக்கு நீர் வேண்டி கடந்த 2 ஆண்டுகளாக தீபம் ஏற்றம் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக 3-வது ஆண்டாக நேற்று தீபம் ஏற்றபட்டது. இதில் பல தன்னார்வலர்கள் கலந்து கொண்டு இயற்கைக்கு நன்றி தெரிவித்து தீபம் ஏற்றினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE