திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை மகா தேரோட்ட வைபவம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோயிலில் நாளை மகா தேரோட்டம் நடைபெறஉள்ள நிலையில், பஞ்ச ரதங்களில்நேற்று கலசங்கள் பொருத்தப்பட் டன.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ம் தேதிதொடங்கியது. அதைத் தொடர்ந்துபஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் ஆரம்பமானது. இந்நிலையில்,முக்கியமான மகா தேரோட்டம் 7-ம் நாள் உற்சவமான நாளை (நவ.23) நடைபெறவுள்ளது. ஒரே நாளில் 5 தேர்கள், மாட வீதியில் பவனி வரும்.

முதலில் விநாயகர் தேர் புறப்பட்டுச் சென்று நிலைக்கு வந்ததும், வள்ளி, தெய்வானை சமேதமுருகரின் தேர் புறப்பட்டு செல்லும். இதையடுத்து, சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருள, பெரியத் தேர் என பக்தர்களால் அழைக்கப்படும் மகாதேர் புறப்பட்டு மாட வீதியில் வலம் வரும்.

இதையடுத்து, பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் பராசக்தி அம்மன் தேர், அடுத்ததாக சண்டிகேஸ்வரர் தேர் புறப்பட்டு செல்லும். காலையில் தொடங்கும்மகா தேரோட்டம் இரவு வரை நடக்கும். லட்சக்கணக்கான பக்தர்கள்பங்கேற்பார்கள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மகா தேரோட்டம் நடைபெறஉள்ளதை அடுத்து, பஞ்ச ரதங்களுக்கு கலசம் பொருத்தும் பணி நேற்று நடைபெற்றது. விநாயகர், முருகர், அண்ணாமலையார், அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்களுக்கும் கலசங்கள் பொருத்தப்பட்டன. முன்னதாக, கலசங்களுக்கு சிறப்பு பூஜை நடை பெற்றது. கலசம் பொருத்தப்பட்டபோது, ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தர்கள் முழக்க மிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE