துலாம்
உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 8-ல் புதன், சுக்கிரன் உலவுவதால் ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு கூடும். எதிர்ப்புக்களைச் சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் அபிவிருத்தி உண்டு. கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கூடிவரும். எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். குடும்பத்தில் அமைதி நிலவும். நண்பர்கள், உறவினர்களின் தொடர்பு நலம் தரும். 12-ல் செவ்வாய், ராகு உலவுவதால் வீண் செலவு, இழப்புகள் ஏற்படும்.
சகோதரர் நலனில் கவனம் தேவை. பயணத்தின்போது எச்சரிக்கை தேவை. கால், இடது கண் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். 4-ம் தேதி முதல் புதன் 9-ம் இடம் மாறுவதால் தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தந்தையால் நலம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 7, 9. திசைகள்: வடமேற்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், பச்சை, வெண்மை, இளநீலம். எண்கள்: 5, 6, 7.
பரிகாரம்: துர்கை, சுப்பிரமணியரை வழிபடவும்.
விருச்சிகம்
உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராகுவுடன் கூடி லாப ஸ்தானத்தில் உலவுவது விசேஷம். குரு 9-ல் உலவுவது சிறப்பு. எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். மன உற்சாகம் பெருகும். எதிரிகள் அடங்குவார்கள். வழக்கில் வெற்றி கிட்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களில் ஆதாயம் கிடைக்கும். போக்குவரத்துச் சாதனங்கள், எரிபொருட்கள், மின்சாதனங்கள், வெடிப்பொருட்கள், தளவாடங்கள் ஆகியவை மூலம் லாபம் பெற வாய்ப்பு உண்டாகும்.
பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். 4-ம் தேதி முதல் புதன் 8- இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு மந்தநிலை விலகும். எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். மாணவர்களது நோக்கம் நிறைவேறும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 4, 9. திசைகள்: தெற்கு, வடகிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: பொன் நிறம், சிவப்பு, வெண்சாம்பல் நிறம். எண்கள்: 3, 4, 5, 9.
பரிகாரம்: ஆதித்தனை வழிபடவும். விநாயகருக்கு நெய் விளக்கேற்றவும்.
தனுசு
உங்கள் ராசிக்கு 6-ல் புதன், 10-ல் செவ்வாய், ராகு, 11-ல் சனி உலவுவதால் தொலைதூரத் தொடர்பு பயன்படும். வியாபாரம் பெருகும். எழுத்து, பத்திரிகை, கணிதம், தரகு, பொறியியல், சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். போக்குவரத்து இனங்கள் லாபம் தரும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். 6-ல் சுக்கிரன், 7-ல் சூரியன், 8-ல் குரு உலவுவதால் கணவன் மனைவி உறவு நிலை பாதிக்கும்.
விட்டுக் கொடுப்பது நல்லது. பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. கேளிக்கை, உல்லாசங்களைத் தவிர்ப்பது நல்லது. உடல்நலனில் அக்கறை தேவைப்படும். 4-ம் தேதி முதல் புதன் 7-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. குடும்பத்தில் சலசலப்புக்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ,ஜூலை 4, 7. திசைகள்: தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடக்கு.
நிறங்கள்: நீலம், சிவப்பு, பச்சை. எண்கள்: 4, 5, 8, 9.
பரிகாரம்: குரு, சுக்கிரனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது. சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்களைத் தானமாக வழங்கவும். வேத விற்பன்னர்களது ஆசிகளைப் பெறுவது நல்லது.
மகரம்
உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 5-ல் சுக்கிரன், 6-ல் சூரியன், 7-ல் குரு, 10-ல் சனி உலவுவது சிறப்பு. பொருள் கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். ஆன்மிக, அறநிலையப்பணிகளில் ஈடுபாடு கூடும். சுப காரியங்கள் நிகழும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள். மாதர்களது எண்ணம் நிறைவேறும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு கிட்டும். முக்கியஸ்தர்கள் உதவி புரிவார்கள். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். எதிரிகள் அடங்கிப் போவார்கள்.
உழைப்புக்கும் திறமைக்குக்கும் உரிய பயன் கிடைக்கும். பிரச்சினைகள் குறையும். 4-ம் தேதி முதல் புதன் 6-ம் இடம் மாறுவதால் வியாபாரம் பெருகும். மாணவர்களது நிலை உயரும். தொழில் நுட்பத்திறமை வெளிப்படும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகள் லாபம் தரும். கணவன் மனைவியிடையே அந்நியோன்யம் கூடும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 4, 7, 9. திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.
நிறங்கள்: இளநீலம், வெண்மை, பொன் நிறம், ஆரஞ்சு. எண்கள்: 1, 3, 5, 6, 7.
பரிகாரம்: முருகனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும்.
கும்பம்
உங்கள் ராசிக்கு 4-ல் புதன் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். சுகானுபவம் உண்டாகும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். விருந்து, விழாக்களில் கலந்து கொள்வீர்கள். மாதர்களது நிலை உயரும். மாணவர்கள் வளர்ச்சி காண்பார்கள். 8-ல் ராகு, செவ்வாய் உலவுவதால் சிறு விபத்து ஏற்படும். எச்சரிக்கைத் தேவை. உடன்பிறந்தவர்களால் மன அமைதி குறையும். எதிலும் நிதானமாக யோசித்து செயல்படுவது நல்லது. வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். தொழிலில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. 4-ம் தேதி முதல் புதன் 5-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. மக்களால் அளவோடு நலம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 7, 9. திசைகள்: தென்கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: பச்சை, இளநீலம், வெண்மை. எண்கள்: 5, 6.
பரிகாரம்: கோளறு திருப்பதிகம் வாசிக்கவும். பெரியவர்களை வணங்கி ஆசிப் பெறவும்.
மீனம்
உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரன், 5-ல் குரு சஞ்சரிப்பதால் எதிர்ப்புக்கள் குறையும். போட்டிகளில் வெற்றி கிட்டும். உடன்பிறந்தவர்கள், பிள்ளைகள், வாழ்க்கைத் துணையால் நலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் நிலை உயரும். ஆசிரியர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் மதிப்பு உயரும். இதர கிரகங்களின் சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் அலைச்சல் அதிகமாகும். மறைமுக எதிரிகள் இருப்பார்கள்.
பிறரிடம் கோபப்படாமல் நிதானமாக பேசுவது அவசியம். வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை. 4-ம் தேதி முதல் புதன் 4-ம் இடம் மாறுவதால் நண்பர்கள், உறவினர்களது சந்திப்பு நலம் தரும். மாணவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 4, 9. திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: இளநீலம், வெண்மை, பொன் நிறம். எண்கள்: 3, 6.
பரிகாரம்: நாகேஸ்வரரை வழிபடவும். ஆஞ்சநேயருக்குரிய ஸ்லோகங்களைச் சொல்லவும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
14 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago