திருவண்ணாமலையின் மகோன்னதமான மகான்களில் ஒருவர் பகவான் ஸ்ரீரமண மகரிஷி. இவரின் ஜயந்தித் திருநாள் நாளை 3ம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.
மதுரைக்கு அருகில் உள்ள அருப்புகோட்டையில் இருந்து உள்ளே செல்லும் சின்னஞ்சிறிய கிராமம் திருச்சுழி. இந்த அழகிய திருச்சுழியில் அவதரித்து, அருணாசலத்தால் ஈர்க்கப்பட்டவர் மகான் ரமணர். அருணையையே தமது ஆன்மாவாக கண்டு, தானும் அது... என வாழ்ந்த அற்புத மகான்!
மதுரையிலிருந்து வந்து அண்ணாமலையார் கோயில் பாதாள லிங்க சந்நிதியில், தீபமலையிலுள்ள விருபாட்சி குகையில் என தங்கி பக்தர்களின் சந்தேகங்களையும் குறைகளையும் தன் மௌனத்தாலும் எளிய, இனிய, ஒற்றை வார்த்தைகளாலும் பதிலாகத் தந்து வழிகாட்டிய மகான் என்று பூரிக்கின்றனர் பக்தர்கள்.
இறைவன் சிவனார், தனக்கு வழங்கி அருளிய ஞானத்தை உலகெங்கும் விதைத்து, விருட்சமாக்கியவர் என்று உலகெங்கும் உள்ள இவரின் பக்தர்கள் கொண்டாடுகின்றனர்.
அண்ணாமலையையொட்டி, கிரிவலப் பாதையில் அமைந்து உள்ளது ஸ்ரீரமணாஸ்ரமம். இன்றைக்கும் உலகில் எங்கிருந்தெல்லாமோ, திருவண்ணாமலைக்கு வந்து, ரமணாஸ்ரமத்தில் தங்கி, அங்கே நடைபெறும் பூஜைகளில் கலந்து கொண்டு, அங்கே தியானமிருந்து ஸ்ரீரமண மகரிஷியின் பேரருளைப் பெற்றுச் செல்கின்றனர்.
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் போது, மலையுச்சியில் தீபம் ஏற்றியதும், பகவான் ரமணரின் திருச்சந்நதியிலும் தீபம் ஏற்றப்படும்.
பிரசாதங்கள் வழங்கப்பட்டு, அருணாசல பஞ்சரத்தினம், அட்சரமணமாலை உள்ளிட்ட பல பாடல்களை பாராயணம் செய்வார்கள் பக்தர்கள். மலை உச்சியில் தீபம் ஏற்றும் சமயத்தில், மெய்யன்பர்களுடன் சேர்ந்து இறைவனை தரிசிப்பதை பகவான் ரமணர் வழக்கமாக கொண்டிருந்தார். அந்த வழிபாடு இன்றைக்கும் தொடர்கிறது. மலை மீது ஜோதி பிரகாசித்ததும், பகவான் சந்நதியிலும் நெய் தீபம் ஏற்றப்படும். அப்போது, பகவானே மெய்யுருவாய் உடனிருப்பதை உணரத்தக்க வகையில், அவரது திருவுருவப்படம் ஆசனத்தில் வைக்கப்படும். அதைத் தொடர்ந்து, ஆஸ்ரமம் முழுவதும் நெய் தீபங்களால் ஜொலிக்கும். மகா தீபப்பெருவிழா நடைபெறும் நாளில், ஆசிரமத்தில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும், அன்னதானமும் தொடர்ந்து நடைபெறும். இதில் கலந்துகொள்ளும் போதே, ஏதோவொரு பூரணத்துவம் நிறைந்து கிடக்கும் மனம் என்று சொல்லிச் சிலாகிக்கிறார்கள் பக்தர்கள்.
’நான் யார்’ எனும் தத்துவ விசாரமே ஸ்ரீரமணரின் கொள்கை. தத்துவம். அருள்மொழி. வேதம். நாளைய தினம் 3.1.18 புதன்கிழமை, பகவான் ரமணரின் ஜயந்தித் திருநாள் .
இதையொட்டி, திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் ஜயந்தித் திருநாள் விமர்சையாக நடைபெறுகிறது. சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
நாளைய நாளில்... அற்புத மகான் ஸ்ரீரமண மகரிஷியை மனதில் நினைப்போம். வீட்டில் விளக்கேற்றி வழிபடுவோம். நம் மன இருளை அகற்றியருள்வார் ரமண பகவான்!
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
8 hours ago
ஆன்மிகம்
17 hours ago
ஆன்மிகம்
22 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago