சாத்தான்குளம் அருகே சொக்கன்குடியிருப்பு புனித யாகப்பர் ஆலய திருவிழா கொடியேற்றம்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சொக்கன்குடியிருப்பில் உள்ள புனித யாகப்பர் - தனிஸ்லாஸ் ஆலய பெருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு காலை 6.30 மணியளவில் திரு யாத்திரை, திருப்பலி நடந்தது.

8.30 மணிக்கு தெண்மண்டல ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை நெல்சன் பால்ராஜ் பெருவிழா கொடியை ஏற்றினார். பங்குத் தந்தை ஜாண்சன்ராஜ் முன்னிலை வகித்தார். தட்டார்மடம் பங்குத் தந்தை கலைச் செல்வன் மறையுரை வழங்கினார். திரளான சபை மக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 10 நாட்கள் நவநாள் திருவிழா திருப்பலி நடைபெறுகிறது.

9-ம் திருவிழாவான 12-ம் தேதி மாலை 6 மணிக்கு தேர் பவனி, இரவு 8 மணிக்கு திருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. அருட்தந்தை ரெக்ஸ் நற்கருணை ஆசீர் வழங்குகிறார். 10-ம் நாளான 13-ம் தேதி காலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலி, மறைவட்ட முதன்மை குரு ஜோசப் ரவி பாலன் தலைமையில் நடக்கிறது.

டி.சவேரியார் புரம் பங்கு தந்தை குழந்தை ராஜன் மறையுரை ஆற்றுகிறார். மாலை 6 மணிக்கு தேர் பவனி, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை பங்குத் தந்தை ஜான்சன்ராஜ் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE