நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழா நாளை (நவ.1-ம் தேதி) கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி முதல் கால யாக சாலை பூஜை நேற்று நடைபெற்றது.
நாமக்கல் நகரின் மையப் பகுதியில், ஸ்ரீ நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித் தாயார் கோயில் எதிரில் ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கடந்த 1996-ம் ஆண்டு கோயில் கும்பாபிஷேகம் நடை பெற்றது. தொடர்ந்து 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (நவ.1-ம் தேதி) கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதன்படி, முதல் கால யாக சாலை பூஜைகள் நேற்று மாலை நடைபெற்றன. தொடர்ந்துஇன்று காலை வருண தீர்த்தம்புனிதப்படுத்துதல், அக்னி பகவான்பூஜை, தமிழ் திவ்ய ப்ரபந்த வேள்வி, அனுதின வேள்வி ஆகிய பூஜைகள் நடைபெற உள்ளன.
» 8-வது முறையாக Ballon d’Or விருதை வென்றார் மெஸ்ஸி!
» “எங்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறினால் சிறப்பு” - ஆப்கன் ரசிகர்கள் உற்சாகம்
தொடர்ந்து 10.45 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும், மாலைபிம்ப வாஸ்து, மஹா சாந்தி வேள்வியை நிறைவு செய்தல், ஒன்பது கலச திருமஞ்சனம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. தொடர்ந்து நாளை காலை 9.30 மணிமுதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
10 days ago
ஆன்மிகம்
10 days ago
ஆன்மிகம்
10 days ago
ஆன்மிகம்
10 days ago
ஆன்மிகம்
11 days ago
ஆன்மிகம்
11 days ago
ஆன்மிகம்
11 days ago
ஆன்மிகம்
12 days ago
ஆன்மிகம்
13 days ago