தசரா திருவிழா: பாளை.யில் அம்மன் சப்பரங்கள் அணிவகுப்பு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த விழா வில் 12 அம்மன் சப்பரங்கள் அணிவகுப்பு, சூரசம்ஹாரம் நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் பாளை யங்கோட்டை ஆயிரத்தம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து காப்பு கட்டுதல், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவில் ஆயிரத்தம்மன், பேராத்து செல்வி அம்மன், தூத்துவாரி முத்தாரம்மன், உச்சிமாகாளி அம்மன் கோயில் உட்பட 11 அம்மன் கோயில்களில் இருந்து உற்சவர் அம்மன் சப்பரங்களில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒரு கோயிலில் திருப்பணி நடைபெறுவதால் அங்கிருந்து அம்மன் பவனி நடைபெறவில்லை. வண்ண விளக்கு அலங்கார ங்கள் ஜொலிக்க ஆயிரத்தம்மன் தலைமையில் 8 ரத வீதிகளிலும் அம்மன் சப்பரங்கள் வீதியுலா நடைபெற்றது. நேற்று காலையில் ராஜகோபால சுவாமி கோயில் முன்பு 11 சப்பரங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் அனைத்து சப்பரங்களுக்கும் ஆரத்தி நடைபெற்று,

மீண்டும் கோயில் களுக்கு திரும்பிச் சென்றன. நவராத்திரி விழா நடைபெறும் 9 நாட்களும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளிக்கும் வைபவம், அம்மன் கொலுவில் வீற்றிருக்கும் வைபவம் நடைபெறும். விஜய தசமியன்று அம்மன் சப்பரங்கள் வீதியுலா வும், அதைத் தொடர்ந்து சூரசம்ஹாரமும் நடைபெறும். விழாவையொட்டி திருநெல்வேலி மாநகர போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE