விவேகானந்தர் பிறந்தநாள் இன்று...பொன்மொழிகளை ஏற்று வாழ்வோம்!

By வி. ராம்ஜி

சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் இன்று. இந்த நாளில்... அவரின் கருத்துகளை உள்வாங்கி, பின்பற்றுவோம். சுவாமி விவேகானந்தரைப் போற்றுவோம்!

* இந்த உலகில் பிறந்த நீங்கள், அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையெனில், உங்களுக்கும் மரங்களுக்கும் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமலே போய்விடும்!

* அடக்கப்படாமல் உள்ள மனமும் அற வழியில் செலுத்தப்படாத மனமும் நம்மை எப்போதும் கீழ் நோக்கியே இழுத்துச் சென்று அழித்துவிடும். அடக்கப்பட்ட மனமும் அறவழியில் செல்லும் மனமும் நமக்குப் பாதுக்காப்பைத் தந்திடும். உலக பந்தங்களில் இருந்து விடுதலை அளிக்கும்!

* இருதயம் விரிவடைந்துள்ள இடத்தில்தான் உண்மை, ஞானம் உதிக்கும். அந்த உண்மையும் ஞானமும்தான் நம்பிக்கை!

* கபடம் இல்லாத நாத்திகன், வஞ்சகனை விடச் சிறந்தவன்!

* எவர் ஒருவருடைய நெஞ்சம், ஏழை மக்களுக்காக, அவர்களின் துயரத்தில் அழுமோ, அவரை நான் மகாத்மா என்பேன்!

* காமம், பொன்னாசை ஆகியவற்றால் ஆளப்படுகிற அற்பர்களைப் பொருட்படுத்த வேண்டிய அவசியமே இல்லை!

* அன்பு நெறியில் சென்று உலகம் உய்வடைந்திட வழிகளைக் கூறும் முறையே மதம் எனப்படும்!

* பலமற்ற மூளையில் நாம் எதையுமே செய்ய முடியாது. அதனால் நாம் அதைப் பலப்படுத்திக் கொள்ளவேண்டும். உண்மையும் சத்தியமுமே அந்தப் பலத்தைக் கொடுக்கும்!

* அச்சமே நமக்குத் துயரத்தைத் தருவது. அச்சமே கேடுகளை விளைவிப்பது. அச்சமே மரணத்தைத் தருகிறது. நம் உண்மை இயல்பை, நாம் அறிந்து கொள்ளாமல் இருப்பதால்தான் நமக்குள் அச்சமே ஏற்படுகிறது.

* கோழைகளே பாவ காரியங்களைச் செய்கிறார்கள். தைரியம் கொண்டவர்கள், பாவம் செய்யமாட்டார்கள்.

* முதலில் வேலைக்காரனாக இருக்கக் கற்றுக் கொண்டால், முதலாளியாகும் தகுதியானது பிறகு தானாகவே வந்துவிடும்!

* அன்பு உடையவனே வாழ்பவன். சுயநலம் உடையவனோ செத்துக் கொண்டிருக்கிறான் என்றுதான் அர்த்தம்!

* எந்த வேலையாக இருந்தாலும் அதை தன் விருப்பத்துக்கு ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளி!

* தன்னை அடக்கிக் கொள்ளப் பழகிக் கொண்டவன், வேறு எதற்குள்ளேயும் சிக்கமாட்டான். அத்தகைய தகுதி உள்ளவனே உலகில் வாழத் தகுதியானவன்!

* பலமே வாழ்வு! பலவீனமே மரணம்!

* உறுதியானவனாக இரு. அதற்கும் மேலாக, தூய்மையானவனாகவும் முழு அளவில் சிரத்தை கொண்டவனாகவும் இரு. வெற்றி தேடிவரும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

12 hours ago

ஆன்மிகம்

21 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்