பழநி: நவராத்திரி விழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலில் அக்.15 முதல் அக்.23-ம் தேதி வரை தங்கரதப் புறப்பாடு நடைபெறாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நவராத்திரி விழா அக்.15-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது. இதேபோல், பழநி முருகன் கோயிலின் உப கோயிலான பெரிய நாயகியம்மன் கோயிலிலும் அக்.15 முதல் அக்.23-ம் தேதி வரை 9 நாட்கள் நவராத்திரி விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பக்திச் சொற்பொழிவு நடைபெற உள்ளன.
பழநி மலைக்கோயிலில் தினமும் இரவு 7 மணிக்கு தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுவது வழக்கம். நவராத்திரி விழாவை முன்னிட்டு அக்.15 முதல் அக்.23 வரை 9 நாட்களும் தங்க ரதப் புறப்பாடு நடைபெறாது. அக்.24 முதல் தங்கரதப் புறப்பாடு நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
23 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago