திருத்தணி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.65 லட்சம்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 15 நாட்களில் ரூ.65 லட்சத்தை பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக பணம், நகை ஆகியவற்றை செலுத்து கின்றனர். பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை முருகன் கோயிலின் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் உஷா, சுரேஷ் பாபு, நாகன், மோகனன் ஆகியோர் முன்னிலையில் கோயில் ஊழியர்கள் மூலம் எண்ணும் பணி நடைபெற்றது.

இதில், கடந்த 15 நாட்களில் ரூ.65 லட்சத்து 48 ஆயிரத்து 194 ரொக்கப் பணம், 401 கிராம் தங்கம், 2,475 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளது தெரியவந்தது. மேலும், திருப்பணி உண்டியல் காணிக்கையாக ரூ.2 லட்சத்து 27 ஆயிரத்து 469 காணிக்கையாக செலுத்தி உள்ளதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE