தெற்குகள்ளிகுளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய தேர்ப்பவனி

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத் திருவிழாவையொட்டி புனிதரின் தேர்ப்பவனி நடைபெற்றது.

தெற்குகள்ளிகுளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கடந்த 21- ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருட்தந்தை ஜெபநாதன் தலைமையில், லாரன்ஸ், பங்குத் தந்தை ஜெரால்டு ரவி, உதவி பங்குத்தந்தை ஜாண் ரோஸ் ஆகியோர் ஜெபம் செய்தனர். தொடர்ந்து 10 நாட்கள் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழா நாட்களில் காலை திருப்பலி, மாலை மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்றது. கடந்த 28-ம் தேதி இரவு 7 மணிக்கு அருட்தந்தை நெல்சன் பால்ராஜ் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து புனித மிக்கேல் அதிதூதரின் அலங்கார தேர்ப்பவனி நடைபெற்றது.

தேர்ப்பவனி கோயில் முன்பிருந்து புறப்பட்டு முக்கிய வீதிவழியாக வலம் வந்து மீண்டும் கோயிலை வந்தடைந்தது. இப்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்று உப்பு, மிளகு, பூ மாலை ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர். விழாவின் 10-ம் நாளில் தூத்துக்குடி மறைமாவட்ட பொருளாளர் அருட்தந்தை சகாயம் தலைமையில் திருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.

காலை 10 மணிக்கு புனிதரின் அலங்கார தேர்ப்பவனி நடைபெற்றது. மாலையில் பௌர்ணமி மரிவலம் வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்றது. அசனவிருந்து வழங்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE