ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி பட்டு வஸ்திரம் அணிவிப்பு

By செய்திப்பிரிவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி வெங்கடேச பெருமாள் அனுப்பிய பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு பூஜை நடைபெற்றது.

திருப்பதியில் ஆண்டுதோறும் நடைபெறும் புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழாவில் கருட சேவையின் போது மலையப்ப சுவாமிக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த பூ மாலை, கிளி, பட்டு வஸ்திரம் ஆகியவை திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதற்கு மறுசீராக திருப்பதி வெங்கடேச பெருமாள் உடுத்திய பட்டு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்படி திருப்பதியில் இருந்து வரப்பட்ட பட்டு வஸ்திரம் வெள்ளிக்கிழமை இரவு நடந்த சுக்கிர வார ஊஞ்சல் சேவையில் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதில் அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமராஜா மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE