வெற்றிலை மாலை, வெண்ணெய் சார்த்தி ... ராமபக்த அனுமனை வணங்குவோம்!

By வி. ராம்ஜி

அனுமன், ஆஞ்சநேயர் என எத்தனை திருநாமங்கள் உண்டு என்றாலும் தன்னை ராமபக்தன் என்று சொல்லிக் கொள்வதிலும் எல்லோரும் அழைப்பதிலும் அப்படியொரு ஆனந்தம் அஞ்சனை மைந்தனுக்கு!

எப்போதும் ராமனுக்கு அணுக்கன், ராமபிரானுக்கு நெருக்கமானவன், அவரின் பக்தன் எனும் பெருமையுடன் ஆலயங்களில் அற்புதமாகக் காட்சி தருகிறார் அனுமன். இவரை வணங்கினால், ஜெயம் உண்டு பயமில்லை என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

புதன் மற்றும் சனிக்கிழமைகளில், அனுமனை தரிசிப்பதும் அவரை மனதார வேண்டுவதும் மிகுந்த பலன்களைத் தரவல்லது என்பது பக்தர்களாகிய நமக்குத் தெரியாதா என்ன. எனவே சனிக்கிழமையான நாளைய தினம் 9ம் தேதி, அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வணங்குங்கள்.

முடிந்தால் வெற்றிலை மாலை சார்த்தி வழிபடுங்கள். வெற்றியைத் தந்தருள்வார் அனுமன். வெண்ணெய் சார்த்தி வேண்டுங்கள். உங்கள் மனதையே குளிரச் செய்துவிடுவார் ஆஞ்சநேயர்.

துளசி மாலை சார்த்தி மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையையே மலரச் செய்து அருளுவார் ராமபக்த அனுமன்!

முக்கியமாக... சனிக்கிழமை ராகுகால வேளையான காலை 9 முதல் 10.30 மணிக்குள் அனுமனை வழிபடுங்கள். கிரகங்களால் உண்டான தோஷம் அனைத்தும் விலகிவிடும் என்பது ஐதீகம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

5 hours ago

ஆன்மிகம்

12 hours ago

ஆன்மிகம்

13 hours ago

ஆன்மிகம்

13 hours ago

ஆன்மிகம்

15 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்