திவ்ய தேசம் பெருமாள் கோயில்களுக்கான ஒருநாள் சுற்றுலா டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சையில் உள்ள திவ்யதேசம் பெருமாள் கோயில்களின் ஒருநாள் சுற்றுலாவுக்கான முன்பதிவு நடைபெற்று வருவதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னையில் திவ்ய தேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலா பயணத்திட்டம் -1 ல், சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் பேருந்து, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், பெசன்ட் நகர் அஷ்டலெஷ்மி கோயில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயில், மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோயில், சிங்கபெருமாள் கோயில், பாடலாத்ரி நரசிம்மர் கோயில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோயில் ஆகிய கோயில்களுக்கு சென்று மாலை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும். .

சென்னையில் திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலா பயணத்திட்டம் -2 ல், சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் பேருந்து, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோயில் , திருமுல்லைவாயில் பொன்சாமி பெருமாள் கோயில், திருவள்ளூர் வைத்திய வீர ராகவ பெருமாள் கோயில், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோயில் ஆகிய கோயில்களுக்கு சென்று மாலை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும்.

மதுரை மாவட்டத்தில் திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலாவில் மதுரை – அழகர்கோவில் சாலையில் உள்ள ஓட்டல் தமிழ்நாடு மதுரை - 2 வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் பேருந்து, அழகர் கோவில் கள்ளழகர் கோயில், ஒத்தகடை ஸ்ரீ யோக நரசிம்ம பெருமாள் கோயில், திருமோகூர் காளமேக பெருமாள் கோயில், திருகோஷ்டியூர் சவும்ய நாராயண பெருமாள் கோயில், மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் ஆகிய கோயில்களுக்கு சென்று மதுரை ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தை மாலை வந்தடையும்.

திருச்சி மாவட்டத்தில் திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலாவில் திருச்சி ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் பேருந்து, உறையூர் அழகிய மணவாள பெருமாள் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில், உத்தமர் கோவில் புருஷோத்தம பெருமாள் கோயில், குணசீலம் பிரசன்ன வெங்கடாசல பெருமாள் கோயில், தான்தோன்றி மலை கல்யாண வெங்கடராம பெருமாள் கோயில் ஆகிய கோயில்களுக்கு சென்று மாலை 5 மணிக்கு திருச்சி ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தை வந்தடையும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலாவில் தஞ்சாவூர் ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் பேருந்து, திருகண்டியூர் சாபவிமோச்சன பெருமாள் கோயில், கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் கோயில், திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் பெருமாள் கோயில், நாச்சியார் கோவில் சீனிவாச பெருமாள் கோயில், திருச்சேறை சாரநாத பெருமாள் கோயில், மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில், வடுவூர் கோதண்டராமர் கோயில் ஆகிய கோயில்களுக்கு சென்று இரவு ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தை வந்தடையும்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத்திட்டத்தின் திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலாவுக்கு முன்பதிவு நடைபெற்று வருகின்றது. திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலா குறித்த மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கட்டணமில்லா தொலைபேசி எண்.180042531111 மற்றும் தொலைபேசி எண்கள் 044-25333333, 044-25333444 ஆகிய எண்களை தொடர்பு கொண்டும், வலைதள முகவரி www.ttdconline.com மூலமாகவும் விவரங்களை பெறலாம், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

ஆன்மிகம்

9 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்