பக்தர்களை வணங்கும் ஆஞ்சநேயர்

ஏழைகளின் கடவுளான ஆஞ்சநேயர் தன் தலைக்கு மேல் ஆகாயமே கூரையாக இருப்பவர். நெடுநெடுவென நின்று, கம்பீரமாய் இரு கை கூப்பி நம்மையும் வணங்கி வரவேற்கிறார்.

ஆஞ்சநேய பக்தர்களை சனி பகவான் சங்கடப்படுத்த மாட்டார் என்பது ஐதீகம். வெண்ணெய்க் காப்பில் ஆஞ்சநேயர் மேனி முழுவதும் வெண்ணெய் பூசியபடி காட்சி தருவார். இலங்கையைத் தன் வால் கொண்டு தீக்கிரையாக்கிய ஆஞ்சநேயரை வெண்ணெய்க் காப்பு குளிர்விப்பதாக நம்பப படுகிறது. அதே வேளையில் தரிசிக்கிறவர்களின் மனதில் உள்ள தகிப்பையும் குறைத்து, அவர்கள் வாழ்வில் தண்மை பரவும். சனிக்கிழமை வந்து ஆஞ்சநேயரைத் தரிசிப்பவர்களுக்கு நிரந்தர ஆனந்தம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வடைமாலை

நவக்கிரகங்களில் சனியைப் போலவே, ராகு பகவானும் மனிதர்களை மட்டற்ற சிக்கலுக் குள்ளாக்குவதில் கைதேர்ந்தவர். ராகு பகவானுக்கு மிகவும் உகந்த தானியம்தான் உளுந்து. அந்த உளுந்தைப் பிரதானமாகக் கொண்டு செய்யப்பட்ட வடைகளை மாலையாகக் கோர்த்து ஆஞ்சநேயருக்கு அணிவிக்கும் வைபவம் ஒவ்வொரு மாதமும் நாமக்கல்லில் நடக்கிறது. வடைமாலை அணிந்த ஆஞ்சநேயரைத் தரிசிப்பது ராகு தோஷம் நீங்க, மிகச்சக்தி வாய்ந்த பரிகாரமாகும். எல்லா வகை, சர்ப்ப தோஷங்களும் பயங்களும் விலகும்.

வெற்றிலை மாலை

ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை போடுவது விசேஷமாகக் கருதப்படுகிறது. அசோகவனத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட சீதையை அனுமன் சந்தித்து ராமனின் கணையாழியைத் தருகி. ராமனின் தூதர் என்று அறிந்து மகிழ்ந்த சீதை, அருகே இருந்த வெற்றிலைக் கொடியிலிருந்து பறித்து ஆசீர்வதிக்கிறார். அதனால் ஆஞ்சநேயர் அகம் மகிழும் என்பதற்காக அம்மாலை அணிவிக்கப்படுகிறது. வெற்றிலை மாலை அணிந்த ஆஞ்சநேயரைத் தரிசித்தால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE