முதலாம் திருப்படியில் சூரிய பகவான், இரண்டாம் திருப்படியில் சிவபெருமான், மூன்றாம் திருப்படியில் சந்திரன், நான்காம் திருப்படியில் பராசக்தி, ஐந்தாம் திருப்படியில் செவ்வாய், ஆறாம் திருப்படியில் முருகப்பெருமான், ஏழாம் திருப்படியில் புதன், எட்டாம் திருப்படியில் விஷ்ணு, ஒன்பதாம் திருப்படியில் குரு பகவான் ஆகியோர் கொலுவிருக்கின்றனர்.
பத்தாம் திருப்படியில் பிரம்மா, பதினோராம் திருப்படியில் சுக்கிரன், பனிரெண்டாம் திருப்படியில் மகாலக்ஷ்மி, பதிமூன்றாம் திருப்படியில் சனீஸ்வர பகவான், பதினான்காம் திருப்படியில் எமதருமன், பதினைந்தாம் திருப்படியில் ராகு பகவான், பதினாறாம் திருப்படியில் சரஸ்வதிதேவி, பதினேழாம் திருப்படியில் கேது பகவான், பதினெட்டாம் படியில் விநாயகப் பெருமான் ஆகியோர் சூட்சும ரூபமாக இருந்து, நமக்கு எல்லா செல்வங்களையும் அனைத்து சந்தோஷங்களையும் தந்தருள்கிறார்கள்.
ஆனால் இது பின்னாளில் சொல்லப்பட்டது என்கிறார் உபந்யாசகர் அரவிந்த் சுப்ரமண்யம்.
பதினேட்டுப் படிகளும் பதினெட்டு தேவதைகளாக, பதினெட்டுத் தெய்வங்களாக இருப்பது சத்தியம். ஆனால் அவை இவை அல்ல என்று சொல்லி, அதற்கான விளக்கங்களையும் தந்தார் அவர்.
நாக யட்சி, மகிஷமர்த்தினி, அன்னபூர்ணா, காளி, கிருஷ்ணகாளி, சக்திபைரவி, கார்த்தவீர்யார்ஜூனன், கிருஷ்ணாபன், இடும்பன், வேதாளம், நாகராஜா, ரேணுகா, சொப்பன வாராஹி, பிரத்தியங்கரா, பூமாதேவி, அகோரம், பாசுபதம், ம்ருத்யுஞ்ஜயம் ... ஆகிய தேவதைகளே தெய்வங்களாக, படிகளாக, பதினெட்டுப் படிகளாக இருந்து அருள்பாலிக்கின்றனர். இதை பிரபல ஐயப்பப் பக்தரும் முக்கிய குருசாமிகளில் ஒருவருமான கம்பங்குடி மீனாட்சிசுந்தரம் ஐயர் தெரிவித்திருக்கிறார் என்று விளக்கினார் அரவிந்த் சுப்ரமண்யம்.
‘‘எங்கள் மஹாசாஸ்த்ரு ஸேவா ஸங்கத்தின் குருநாதர் ஸ்ரீ ஸ்ரீநிவாஸ ஐயர்தான். அதாவது சாமி அண்ணா என்று எல்லோராலும் அழைக்கப்படுபவரும் என் கொள்ளுத்தாத்தாவும் குருநாதருமான இவர்தான் இன்றளவும் எங்களுக்கு வழிகாட்டியாக இருந்து எங்களையெல்லாம் வழிநடத்துகிறார் என்கிறார் அரவிந்த் சுப்ரமண்யம்.
சாஸ்த்ரு பாதாப்ஜ ப்ருங்காபம் ஸதா சாஸ்த்ரு ஜ
சாஸ்த்ரு பாதாப்ஜ ப்ருங்காபம் ஸதா சாஸ்த்ரு ஜபே ரதம்
மத் ஹ்ருதயாரவிந்தஸ்தம் ஸ்ரீநிவாஸ குரும் பஜே
மத் ஹ்ருதயாரவிந்தஸ்தம் ஸ்ரீநிவாஸ குரும் பஜே
அதாவது, சாஸ்தாவின் பாதம் எனும் தாமரையை சுற்றும் வண்டாகவும், என்று சாஸ்தாவின் ஜபத்தைச் செய்வதையே வ்ரதமாக ஏற்றவரும், என் இதயத் தாமரையில் வீற்றிருக்கும் குருவானவருமான ஸ்ரீ ஸ்ரீநிவாஸ குருவை வணங்குகிறேன். என்று சொல்லிச் சிலிர்க்கிறார் அவர்.
இந்த வேளையில்... சாமி அண்ணாவின் முக்கியமான சிஷ்யர்களில் ஒருவரான வீரராகவ ஐயங்காரைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். சென்னை தி.நகரில் வசித்தார்.
‘‘அடுத்த வருஷம் பங்குனி உத்திரத்துக்கு நீங்க யாரும் பாலக்காட்டுக்கு வர வேண்டாம். நீங்கள் எல்லோரும் அவரவர் சக்திக்கு உட்பட்டு ஐயப்பனுக்கு என்னவிதமாலாம் கைங்கர்யம் செய்ய முடியுமோ, அப்படிச் செய்யுங்க. செஞ்சிகிட்டே இருங்க. தொடர்ந்து மலைக்குப் போறதையும் மலைக்கு வர்ற பக்தர்களுக்கு அன்னதானம் பண்றதையும் விட்டுடாதீங்க’ என்று சாமி அண்ணா 88ம் வருடம் பங்குனி உத்திரம் பூஜைகள் முடிந்த கையுடன் சொல்லிவிட்டு, எல்லோருக்கும் விடை கொடுத்தார் சாமி அண்ணா. பம்பா கணபதி சந்நிதியில் நடந்தது இது.
இதைக்கேட்டு வருத்தப்பட்டவர்களில், தவித்துப் போனவர்களில், தவறு ஏதும் செய்துவிட்டோமோ என்று மருகியவர்களில் வீரராகவ ஐயங்காரும் ஒருவர்.
மிகச்சிறந்த ஐயப்ப பக்தர். ஐயப்பனையே அனவரதமும் நினைத்து வாழ்ந்தவர். தன் குருநாதராக சாமி அண்ணாவை ஏற்றுக் கொண்டு, அவர் வழிநடந்தவர். சாமி அண்ணாவுடன் பல வருடங்கள் சபரிமலைக்குச் சென்றவர்.
சாமி அண்ணா, பகவான் ஐயப்ப சுவாமியிடம் ஐக்கியமாகி விட்ட பிறகு, ‘ஐயப்பனுக்கும் சாமி அண்ணாவுக்காகவும் ஏதாவதுசெய்யணுமே’ என்று நினைத்தபடியே இருந்தார். சாமி அண்ணாவுக்குப் பிறகு அவர் நினைவையும் பக்தியையும் போற்றும் வகையில், வருடாவருடம், பங்குனி உத்திரம் என்றில்லாமல், சாமி அண்ணாவின் இறந்த ஆங்கிலத் தேதியை வைத்துக் கொண்டு, சபரிமலையில் ஐயப்பனுக்கு விசேஷ பூஜைகள் செய்துவந்தார். சாமி அண்ணா அளவுக்கு பங்குனி உத்திர பூஜைகளைச் செய்வது போல், பிரமாண்டமாகச் செய்ய இயலாது போனாலும் தன்னால் முடிந்த அளவுக்கு விமரிசையாகவே பூஜைகளை, வருடம் தவறாமல் செய்து வந்தார்.
கிட்டத்தட்ட, 25 வருடங்களாகத் தொடர்ந்து இந்தப் பூஜைகளைச் செய்து வந்தார் வீரராகவ ஐயங்கார். ஒருகட்டத்தில் இந்தப் பூஜையுடன் ஐயப்ப சுவாமிக்கு கனகாபிஷேக பூஜையும் சேர்த்து நடத்த ஏதோவொன்று கட்டளையிட... அதன்படி கனகாபிஷேக பூஜையையும் ஐயப்பனுக்கு நடத்தி வந்தார்.
நான்கைந்து வருடங்களுக்கு முன்பு... ஒரு கனவு. வீரராகவ ஐயங்காரின் கனவில் ஐயப்ப சுவாமி வந்து, ‘எனக்கு வைரக்கிரீடம் சார்த்து’ என்று கேட்பதாகவும் ‘எனக்கு ஏது அவ்ளோ வசதி. எங்கிட்ட பணம் இல்லையே’ என்று இவர் வருந்துவது போலவும் ‘உனக்கு காசு வரும். நீ சம்பாதிச்ச சொத்து உன்னைத் தேடி வரும்’ என்று ஐயப்பனே சொன்னதாகவும் விடிந்து எழுந்ததும் எல்லோரிடமும் சொன்னார்.
இதே காலகட்டத்தில்... வீரராகவ ஐயங்காரின் உடல்நிலையும் நோய்வாய்ப்பட்டது. அவருக்கு கேன்ஸர். உடலை உருக்கிப் போடுகிற கேன்ஸர் ஒருபக்கம்... வருடந்தவறாமல் ஐயப்ப சுவாமிக்கு செய்து வந்த பூஜைகள் இன்னொரு பக்கம் என்று ஐயப்பனை நினைத்தபடியே ஓடியாடி பூஜை, புனஸ்காரங்களில் ஈடுபட்டு வந்தார். மனதுக்குள் வைரக்கிரீட விஷயம் ஓடிக்கொண்டே இருந்தது.
கனவில் அசரீரி போல், சாஸ்தாவே வந்து ‘உன் சொத்து உங்கிட்ட வந்துசேரும்’ என்று அருளியது போல, வீரராகவ ஐயங்கார் சம்பாதித்தது, அவர் கைக்கு வந்து விழுந்தது. நெக்குருகிப் போனார்.
மளமளவென, வைரக்கிரீட வேலைகளில் மூழ்கினார். ஐயப்பனுக்கு கிரீட அளவு, உயரம் முதலானவற்றையெல்லாம் கணக்கெடுத்து, சென்னையின் புகழ்பெற்ற நகைக்கடையில் ஆர்டர் கொடுத்தார். ‘என் ஐயப்பனுக்கு வைரக்கீரிடம். வைரமென்ன... தங்கமென்ன... இதை பகவான் அணிஞ்சிண்டார்னா... இந்தக் கீரிடம் அழகாயிரும். கிரீடத்துக்கு பெருமை சேர்ந்துரும்’ என்று சொல்லிக் கொண்டே, வைரக்கிரீட வேலைகளை அத்தனை ஆர்வத்துடன் பார்த்துப் பார்த்து செய்யும் பணியில் ஈடுபட்டார்.
வைரக் கிரீடம் தயார். நகைக்கடையில் இருந்து வீட்டுக்கு எடுத்துவரப்பட்டது. குளித்தார். ஐயப்ப நாமங்களைச் சொன்னார். சுவாமி மேடையில் வைரக் கிரீடத்தை வைத்து, அதற்கு மஞ்சள், குங்குமமிட்டு, பூக்களால் அலங்கரித்தார்.
‘இதோ... நீ கேட்ட வைரக்கிரீடம். ஐயப்பா... இது உனக்குத்தான். நல்லாருக்கா. ஜோரா இருக்கா. எனக்கு சந்தோஷம். பரம சந்தோஷம். பரம திருப்தி. ஆத்ம திருப்தி’ என்று சொல்லி நமஸ்கரித்தார். பூஜை முடிந்து எழுந்து வந்த ஐந்தாவது நிமிடம்... ஐயப்பனின் திருப்பதம் அடைந்தார்.
கேன்ஸர் எனும் கொடிய நோயால், பேரவஸ்தையெல்லாம் படாமல், பகவான் ஐயப்ப சுவாமியிடம் ஐக்கியமான வீரராகவ ஐயங்கார் முதலான பக்தர்கள் இன்றைக்கு உள்ள மொத்த ஐயப்பசாமிகளுக்கும் குரு. வழிகாட்டி.
அந்த வைரக்கிரீடம்...?
ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, வீரராகவ ஐயங்காரின் மாப்பிள்ளையும் சிறுவனான பேரனும் எடுத்துக் கொண்டு, சபரிமலைக்குச் சென்று, ஐயப்பனுக்கு வைரக் கிரீடத்தைச் சார்த்தினார்கள்.
யார் கண்டது... அந்தப் பேரன் அடுத்த தலைமுறை. அடுத்தபடியாய்... தனக்கு சேவகம் செய்ய, சாமி அண்ணா குடும்பத்தில் இருந்து அரவிந்த் சுப்ரமண்யத்தை வரித்துக் கொண்டது போல், இந்தச் சிறுவனையும் வீரராகவ ஐயங்கார் எனும் ஐயப்ப பக்தரின் குடும்பத்தில் இருந்து தனக்காக, தனக்கான கருவியாக வைத்துக் கொள்வாரோ ஐயப்ப சுவாமி? நமக்கென்ன தெரியும்.
அனைத்தும் ஐயப்பனின் கட்டளை இங்கே.
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!
- ஐயன் வருவான்
தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
5 hours ago
ஆன்மிகம்
12 hours ago
ஆன்மிகம்
13 hours ago
ஆன்மிகம்
13 hours ago
ஆன்மிகம்
15 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago