ஏதேனும் ஒரு பிரச்னை, சிக்கல், குழப்பம் என்றால், கண்களை மூடியபடி, மனதுக்குள் 'ஜெய் ஆஞ்சநேயா’ என்று மூன்று முறை சொன்னாலே போதும்... அங்கே நம்முடைய பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, சிக்கல்களைக் களைவதற்காக, குழப்பங்களையெல்லாம் நிவர்த்தி செய்வதற்காக... ஓடோடி வருவார்; அருள்வார் ஆஞ்சநேயர் என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!
குடும்பத்தில் ஒற்றுமை இல்லாமல் கவலையோடும் துக்கத்தோடும் இருப்பவர்கள், எவ்வளவு சம்பாதித்தாலும் கடனெல்லாம் இன்னும் அடையவே இல்லை கவலைப்படுகிற கண்ணீர் விடுகிற அன்பர்கள், தினமும் 108 முறை ஸ்ரீராம ஜெயம் எழுத முடியுமா.
ஆமாம். தினமும் 108 முறை ஸ்ரீராம ஜெயம் எழுதுங்கள். காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு, வீட்டில் விளக்கேற்றுங்கள். பூஜையறையில் அல்லது சுவாமி படத்துக்கு எதிரில் அமர்ந்து கொண்டு, 108 முறை ஸ்ரீராம ஜெயம் எழுதுங்கள். தினமும் எழுதுங்கள். பிறகொரு நாளில், முடிந்தால் சனிக்கிழமையின் போது, ஸ்ரீராமஜெயம் எழுதியதை அப்படியே மாலையாக்கி, மாலை போல் கட்டி, அருகில் கோயில் கொண்டிருக்கும் ஆஞ்சநேயருக்கு சார்த்திவிட்டு மனதார வேண்டிக் கொள்ளுங்கள். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். எலியும்பூனையுமாக இருந்தவர்கள், நகமும் சதையுமாக மாறி கருத்தொருமித்து இனிதே வாழ்வார்கள் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.
அதேபோல், ஸ்ரீராமஜெயம் எழுதி, அதை மாலையாக்கி அனுமனுக்கு சார்த்திவிட்டு, ஆலயத்தில் தரும் செந்தூரப் பிரசாதத்தை தினமும் இட்டுக் கொள்ளுங்கள். கடன் தொல்லை விரைவில் நீங்கும். வீட்டில் காசுபணத்துக்குக் குறைவில்லாத நிலை ஏற்படும். ஆபரணங்கள் சேரும் என்பது உறுதி என்கிறார் பாலாஜி வாத்தியார்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
13 mins ago
ஆன்மிகம்
9 hours ago
ஆன்மிகம்
13 hours ago
ஆன்மிகம்
21 hours ago
ஆன்மிகம்
21 hours ago
ஆன்மிகம்
21 hours ago
ஆன்மிகம்
23 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago