இழந்ததைத் தரும் சோம வார சங்காபிஷேகம் ... கார்த்திகை கடைசி திங்களை தவறவிடாதீங்க!

By வி. ராம்ஜி

கார்த்திகை மாதத்தில், தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில், சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில் சிவபெருமானை தரிசிப்பது மிகுந்த பலனைத் தரும் என்பது ஐதீகம்.

திங்கட்கிழமையை சோமவாரம் என்பார்கள். சிவபெருமானுக்கு ஸ்ரீசோமநாதர் எனும் திருநாமமும் உண்டு. திங்கள் என்றால் சந்திரன். சிவனாரின் தலையில் சந்திரனையும் கங்கையையும் சூடியிருப்பார். எனவே கார்த்திகை மாத திங்கட்கிழமை நாளில், சிவபெருமானுக்கு வில்வார்ச்சனை செய்து வணங்கினால், மனோபலத்தையும் தெளிவையும் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கட்கிழமை வருகிற 11ம் தேதி. இந்த திங்கட்கிழமையை தவறவிடாதீர்கள்.

இந்தநாளில், காலையும் மாலையும் சிவனாருக்கு நடைபெறும் விசேஷ பூஜையில் கலந்து கொண்டு, சிவ தரிசனம் செய்யுங்கள். சங்காபிஷேகம் சிவாலயங்களில் நடைபெறும். சில கோயில்களில் 108 சங்காபிஷேகமும் 1008 சங்காபிஷேகமும் விமரிசையாக நடைபெறும்.

சங்காபிஷேகத்தில் சிவ தரிசனம் செய்யுங்கள். வாழ்வில் இழந்ததைப் பெறுவீர்கள் என்பது சத்தியம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

5 hours ago

ஆன்மிகம்

12 hours ago

ஆன்மிகம்

13 hours ago

ஆன்மிகம்

13 hours ago

ஆன்மிகம்

15 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்