ஸ்ரீராமரின் பட்டாபிஷேகம், கோலாகலமாக நடைபெற்றது. சூர்ய வம்சத்தின் குலதெய்வம் ரங்கநாதப் பெருமாள். இந்த ரங்கநாதரையே விபீஷணருக்குப் பரிசாகத் தந்தருளினார் ராமர். அந்த இணையற்ற பரிசைப் பெற்றுக் கொண்டு, விமானத்தில் பறந்தார் விபீஷணர். அந்த விமானத்தின் பெயர்... பிராண வாக்ருதி விமானம்!
ஆனால், பெருமாள் நாம் எங்கே தங்கவேண்டும். தங்கியிருந்து உலகத்தாருக்கு அருள் புரியவேண்டும் என திருவுளம் செய்துவிட்டார். அதன்படி காவிரிக் கரையில் கோயில் கொள்வது என முடிவு செய்தார்/
ஆகவே விபீஷணருக்கு உடல் அசதியை ஏற்படுத்தினார். இந்த அசதியால், வானில் பறந்து கொண்டிருந்தவர், காவிரியைப் பார்த்தார். உடனே தரையிறங்கினார். காவிரிக் கரைக்கு வந்தார். ஒரு மேடான அந்தப் பகுதியில், பெருமாளை வைத்தார். அந்த இடத்துக்கு பின்னாளில் அரங்கம் என்றே பெயர் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.
பிறகு, காவிரியில் அசதி தீர நீராடினார். கரையேறினார். பெருமாளை, விக்கிரகத்தை எடுக்க முற்பட்டார். ம்ஹூம்... அசைக்கக் கூட முடியவில்லை. பெருமாள், இங்கே இருப்பதற்கே விரும்புகிறார் என உணர்ந்து, அந்த இடத்தை வணங்கிவிட்டுப் புறப்பட்டார்.
இவற்றையெல்லாம் அறிந்து வியந்து சிலிர்த்த தர்மவர்மன் எனும் மன்னன், பெருமாளுக்குக் கோயில் கட்டினான். வழிபட்டான். காலப்போக்கில், இந்தக் கோயில் சிதிலமடைந்து விட்டதாகச் சொல்கின்றனர். பிறகு அப்படியே காவிரியில் புதைந்து போனது விக்கிரகம்.
காலங்கள் ஓடின. தர்மவர்மன் பரம்பரையைச் சேர்ந்த கிள்ளிவளவன் என்பவன் ஆட்சி செய்து வந்தான். ஒருநாள், கிள்ளிவளவ ராஜா, தன் படைகளுடன் வேட்டைக்குப் புறப்பட்டான். அப்போது காட்டில் மரநிழல் ஒன்றில் ஓய்வெடுத்தான்.
அப்படி அவன் இளைப்பாறிக் கொண்டிருந்த வேளையில், அந்த மரத்தின் கிளையில் உட்கார்ந்திருந்த கிளி ஒன்று, பாற்கடலை வீடாகக் கொண்ட மகாவிஷ்ணு, இங்கே இந்தப் பகுதியில்தான் ரங்கநாதராகப் பள்ளி கொண்டிருக்கிறார். ரங்கன், அரங்கன் என்றெல்லாம் அவனைச் சொல்லுவார்கள். அந்த விக்கிரகத்தை இருக்கும் இடம் எனக்குத் தெரியும்’ என்று சொல்லிற்று.
அத்துடன் அரங்கன் என்கிற ரங்கன் இருக்குமிடத்தையும் காட்டியது கிளி என்கிறது ஸ்தல புராணம்!
இத்தனைப் புராதன - புராணப் பெருமை கொண்ட ஸ்ரீரங்கம் திருத்தலம் ரொம்பவே விசேஷமானது. காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவே பிரமாண்டமாக அமைந்திருக்கும் ரங்கனின் ஆலயத்தைப் பார்த்தாலே போதும்... நம் பாவமெல்லாம் பறந்தோடிவிடும்!
கோயில் அழகு. கோபுரம் அழகு. இங்கே அரங்கன் கொள்ளை அழகு. எல்லாவற்றையும் விட பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு வைபவம், நம் இந்த ஜென்மத்தையே புனிதப்படுத்தும் விழா என்கின்றனர் பக்தர்கள்! இங்கே வருகிற 29ம் தேதி வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு வைபவம்!
ரங்கா... ரங்கா!
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
4 hours ago
ஆன்மிகம்
13 hours ago
ஆன்மிகம்
18 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago