மேஷ ராசிக்காரர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரன், 6-ல் ராகு உலவுவது சிறப்பு. முன்னேற்றத்துக்கான தகவல் ஒன்று வந்து சேரும். உடன்பிறந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அலைச்சல் வீண்போகாது. கலைத்துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பயணத்தால் அனுகூலம் ஏற்படும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கடல் வாணிபம் செய்பவர்களுக்கு ஆதாயம் கூடும்.
புதிய பொருட்களும் சொத்துக்களும் சேரும். பெண்களின் நிலை உயரும். மாணவர்கள் வளர்ச்சி காண்பார்கள். எலெக்ட்ரானிக் இனங்கள் லாபம் தரும். 4-ல் சூரியனும், 7-ல் செவ்வாய், சனி இருப்பதால் உடல்நலனில் கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 26, 29, 30 | திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: வெண்மை, இளநீலம், வெளிர் கறுப்பு | எண்கள்: 4, 6.
பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்யவும்.
ரிஷப ராசிக்காரர்களே
உங்கள் ஜன்ம ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், 6-ல் செவ்வாய், சனி, 11-ல் கேது உலவுவது சிறப்பு. குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். பேச்சில் இனிமை கூடும். வாழ்க்கைத்துணையால் அனுகூலம் உண்டாகும். பெண்களுக்கு உற்சாகம் கூடும். அரசியல்வாதிகள், அரசுப் பணியாளர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பொறியியல், சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனை புரிவார்கள்.
நிர்வாகத் திறமை கூடும். நிலபுலங்கள் சேரும். புதனின் பலம் குறைந்திருப்பதால் வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். 3-ல் குரு, 5-ல் ராகு இருப்பதால் பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 26, 29, 30 | திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, மேற்கு
நிறங்கள்: ஆரஞ்சு, மெரூன், வெண்மை, இளநீலம் | எண்கள்: 1, 6. 7, 8, 9.
பரிகாரம்: துர்கை அம்மன், தட்சிணாமூர்த்தியை வழிபடவும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவவும்.
மிதுன ராசிக்காரர்களே
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரன், 2-ல் புதன், குரு 10-ல் கேது உலவுவதால் புதிய பொருட்சேர்க்கை நிகழும். கலைத்துறையினருக்குப் புகழோடு பொருளும் சேரும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். வாழ்க்கைத்துணையால் அனுகூலம் உண்டாகும்.
நண்பர்கள், உறவினர்கள் உதவுவார்கள். ஆசிரியர்கள், சட்ட வல்லுனர்கள், மேடைப் பேச்சாளர்கள் நிலை உயரும். 4-ல் ராகு இருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். 5-ல் செவ்வாயும் சனியும் இருப்பதால் பிள்ளைகளால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 26, 29, 30 | திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, வடகிழக்கு, வடக்கு.
நிறங்கள்: இளநீலம், பச்சை, வெண்மை, மெரூன், பொன் நிறம், மஞ்சள் | எண்கள்: 3, 5, 6, 7.
பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்யவும். தந்தை வழி உறவினர்களுக்கு உதவி செய்வது நல்லது.
கடக ராசிக்காரர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 12-ல் சுக்கிரன் உலவுவதால் சுபச் செலவுகள் கூடும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும் செலவு செய்வீர்கள். பெண்களின் நிலை உயரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் இனிக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பயணம் சம்பந்தமான இனங்கள் லாபம் தரும். உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.
நண்பர்கள், உறவினர்களால் சில பிரச்சினைகள் ஏற்படும். வாரப் பின்பகுதியில் பணவரவு சற்று அதிகரிக்கும். எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழ்வதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் ஓரிரு நன்மைகள் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 26, 29, 30 | திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு
நிறங்கள்: வெண்மை, சாம்பல் நிறம் | எண்கள்: 4, 6
பரிகாரம்: கோளறு திருப்பதிகம் வாசிக்கவும். பெரியவர்களின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாவது நல்லது.
சிம்ம ராசிக்காரர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், சனி, 11-ல் சுக்கிரன் உலவுவதால் முக்கியமான காரியங்கள் வார முன்பகுதியில் நிறைவேறும். கலைத்துறையினருக்கும் மாதர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். வார நடுப்பகுதியில் செலவுகள் அதிகரிக்கும். உடல்நலனில் கவனம் தேவை. கண்ணில் பிரச்சினை ஏற்படும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. பிள்ளைகளால் சிறு சங்கடம் ஏற்படும்.
பேச்சில் நிதானம் தேவை. இடமாற்றம் ஏற்படும். அரசு விவகாரங்களில் விழிப்புத் தேவை. புதியவர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். பெரியவர்கள், மேலதிகாரிகள் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 26, 29, 30 | திசைகள்: தென்கிழக்கு, தெற்கு, மேற்கு
நிறங்கள்: நீலம், சிவப்பு, வெண்மை | எண்கள்: 6, 8, 9
பரிகாரம்: சூரியனை வழிபடவும். கண் பார்வையற்றவர்களுக்கு உதவவும்.
கன்னி ராசிக்காரர்களே
உங்கள் ராசிக்கு 11-ல் சூரியன், புதன், குரு உலவுவதால் முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். தான, தர்மப் பணிகளிலும் தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு கூடும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும்.கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.
அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்புக் கூடிவரும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கும். மாணவர்கள் வளர்ச்சி காண்பார்கள். தொழில் நுட்பத் திறமை வெளிப்படும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். வாரப் பின்பகுதியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 26, 30 | திசைகள்: கிழக்கு, வடகிழக்கு, வடக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: வெண்மை, இளநீலம், பச்சை, ஆரஞ்சு, பொன் நிறம் | எண்கள்: 1, 3, 5, 6
பரிகாரம்: சக்தி வழிபாடு நலம் தரும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
14 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago