வார ராசி பலன் 24-4-14 முதல் 30-4-14 வரை (துலாம் முதல் மீனம் வரை)

By சந்திரசேகர பாரதி

துலாம்

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 5-லும் குரு 9-லும் உலவுவது சிறப்பாகும். சுக்கிரனை குரு பார்ப்பதும் குறிப்பிடத்தக்கது. மனமகிழ்ச்சி கூடும். மக்களால் நலம் உண்டாகும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். மந்திர, தந்திர, யந்திர சாஸ்திரங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். எதிர்ப்புகள் கட்டுக்குள் அடங்கியிருக்கும். பெண்களால் அனுகூலம். கலைத் துறையினருக்கு சுபிட்சம் கூடும்.

ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்களின் சேர்க்கை நிகழும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். 28 முதல் சுக்கிரன் 6-ஆமிடம் மாறுவதால் வாழ்க்கைத் துணைவரால் பிரச்சினை வரும். பங்குதாரர்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். கோபப்படாமல் நிதானமாகப் பேசிப் பழகுவது நல்லது.

>> அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 24 (முற்பகல்), 25, 27, 28. >> திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை, பொன் நிறம். >> எண்கள்: 3, 6.

பரிகாரம்: ஆஞ்சநேயரையும் பிள்ளையாரையும் வழிபடுவது நல்லது. துர்கா கவசம் பாராயணம் செய்யவும்.



விருச்சிகம்

ராசிநாதன் செவ்வாய் 11-ஆமிடத்திலும் சுக்கிரன் 4-லும், சூரியன், புதன், கேது ஆகியோர் 6-லும் உலவுவது சிறப்பாகும். 12-ல் உலவும் வக்கிர சனியும் நலம் புரிவார். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அரசியல்வாதிகளுக்குச் செல்வாக்கு உயரும். அரசுப்பணியாளர்களது நிலை உயரும்.

வேலையில்லாதவர்களுக்குத் தகுந்த வாய்ப்புக் கூடிவரும். எலெக்ட் ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். 28 முதல் சுக்கிரன் 5-ஆமிடம் மாறுவதால் மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் இடம் பெறும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் தேடிவரும். பெண் குழந்தைகளின் நலனுக்காகச் செலவு செய்வீர்கள். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும்.

>> அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 24 (முற்பகல்), 25, 27, 28.

>> திசைகள்: கிழக்கு, வடக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தெற்கு.

>> நிறங்கள்: ஆரஞ்சு, இளநீலம், வெண்மை, மெரூன், சிவப்பு. >> எண்கள்: 1, 5, 6, 7, 9.

>> பரிகாரம்: குரு, ராகு ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது.



தனுசு

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் 7-ல் குருவும் 10-ல் செவ்வாயும், 11-ல் சனி, ராகு ஆகியோரும் உலவுவது சிறப்பு. 5-ல் சூரியனும் புதனும் இருந்தாலும் நலம் புரிவார்கள். வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். போட்டி, பந்தயங்களிலும் விளையாட்டு விநோதங்களிலும் ஈடுபாடு கூடும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். திருமண வாய்ப்பு உருவாகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். 28 முதல் சுக்கிரன் 4-ஆமிடம் மாறுவதால் சுகானுபவம் கூடும்.

>> அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 24, 25, 27, 28. >> திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு, மேற்கு, வடகிழக்கு.

>> நிறங்கள்: நீலம், சிவப்பு, ஆரஞ்சு, பொன் நிறம். >> எண்கள்: 7-ஐத் தவிர இதர எண்கள்.

>> பரிகாரம்: பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை அணிவித்து, நெய் விளக்கேற்றி வழிபடவும். கணபதிக்குரிய மந்திரங்களைச் சொல்வது நல்லது. பெரியவர்களின் மனம் குளிரும்படி நடந்துகொள்ளவும்.



மகரம்

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும் 4-ல் புதனும் 10-ல் ராகுவும் உலவுவதால் குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். மனத்தில் உற்சாகம் பெருகும். பண நடமாட்டம் அதிகரிக்கும். பெண்களால் அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ பெற வாய்ப்பு உண்டாகும்.

நண்பர்களும் உறவினர்களும் ஓரளவு உதவுவார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். வாழ்க்கைத் துணையால் அனுகூலம் உண்டாகும். வாரப் பின் பகுதியில் அலைச்சல் அதிகரிக்கும்; அதற்கான பயனும் கிடைக்கும். பெற்றோர் நலனில் கவனம் செலுத்துவது நல்லது.

>> அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 24, 25, 27, 28. >> திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு, வடக்கு.

>> நிறங்கள்: இளநீலம், வெண்மை, கறுப்பு, பச்சை. >> எண்கள்: 4, 5, 6.

>> பரிகாரம்: சூரியனையும், விநாயகரையும் வழிபடவும். வேத விற்பன்னர்களுக்கு உதவி செய்யவும்.



கும்பம்

ஜன்ம ராசியில் சுக்கிரனும், 3-ல் சூரியனும் கேதுவும், 5-ல் குருவும் உலவுவதால் மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் கூடும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். மாதர்கள் தங்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள். ஆடை, அணிமணிகள் சேரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு உண்டாகும்.

ஆன்மிக, அறநிலையப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். பண நடமாட்டம் அதிகரிக்கும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். 28 முதல் சுக்கிரன் 2-ஆமிடம் மாறுவதால் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும். ஜலப் பொருட்கள் லாபம் தரும். குடும்ப நலம் சிறக்கும்.

>> அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 24, 25, 27, 28. >> திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, கிழக்கு.

>> நிறங்கள்: மெரூன், பொன் நிறம், இளநீலம், வெண்மை, ஆரஞ்சு. >> எண்கள்: 1, 3, 6, 7.

>> பரிகாரம்: விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது நல்லது. யோக நரசிம்மரை வழிபடவும்.



மீனம்

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும், 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பு. சுப காரியங்களுக்காகவும் வசதிகளைப் பெருக்கிக்கொள்வதற்காகவும் செலவு செய்வீர்கள். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புக்கள் ஏற்பட்டு விலகும். நண்பர்களும் உறவினர்களும் தக்க தருணத்தில் முன்வந்து உதவுவார்கள். 28-ம் தேதி முதல் சுக்கிரன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதால் புதிய பொருட்சேர்க்கை நிகழும். ஜலப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். பெண்களுக்கு மன உற்சாகம் கூடும். செய்துவரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். சோர்வுக்கு இடம் தராமல் கடுமையாகப் பாடுபடுபவர்களுக்குப் பயன் கூடும். பிறரிடம் கோபப்படாமல் சுமுகமாகப் பழகுவது நல்லது.

>> அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 27, 28. >> திசைகள்: வடக்கு, தென்கிழக்கு.

>> நிறங்கள்: இளநீலம், வெண்மை, பச்சை. >> எண்கள்: 5, 6.

>> பரிகாரம்: கோளறு திருப்பதிகம் வாசிக்கவும். நவக்கிரகங்களுக்குரிய காயத்ரியைச் சொல்லவும். அன்னதானம் செய்வது நல்லது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

17 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்