பழநி மலைக் கோயில் ரோப் கார் ஒரு மாதத்துக்கு நிறுத்தம்

By ஆ.நல்லசிவன்

திண்டுக்கல்: பழநி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் ரோப் கார் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (ஆக.19) முதல் ஒரு மாதம் நிறுத்தப்பட உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல படிப்பாதை, யானைப் பாதை, மின் இழுவை ரயில் (வின்ச்) மற்றும் கம்பி வட ஊர்தி (ரோப் கார்) ஆகிய வசதிகள் உள்ளன. இழுவை ரயிலில் 7 நிமிடங்களிலும், ரோப் காரில் 3 நிமிடங்களிலும் மலைக்கோயிலை அடையலாம். இதனால் ரோப் காரில் அதிககளவில் பக்தர்கள் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

மாதந்தோறும் ஒரு முறையும், வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ஒரு மாதமும் ரோப் கார் சேவை நிறுத்தப்படுகிறது. அதன்படி, நாளை (ஆக.19) முதல் ஒரு மாதம் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப் கார் நிறுத்தப்பட உள்ளது. இதனால் பக்தர்கள் மின் இழுவை ரயில், படிப்பாதை மற்றும் யானைப் பாதையை பயன்படுத்தி மலைக்கோயில் செல்லலாம் என திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE