ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்துக்குப் பிறகு இலங்கைக்குப் புறப்பட்ட விபீஷணன், திருமாலின் சயனக்கோல விக்கிரகத்தை ஸ்ரீ ராமரிடம் இருந்து பரிசாகப் பெற்றான். இலங்கையில் பிரதிஷ்டை செய்ய விரும்பினான்.
அப்போது ஸ்ரீராமர், ‘இலங்கையை அடையும் வரை இந்த விக்கிரகத்தை எங்கும் கீழே வைக்கக் கூடாது’ என்று நிபந்தனை விதித்தார்.
அதன்படி கையில் விக்கிரகத்துடன் நடந்தான் விபீஷணன். காவிரிக் கரையை அடைந்ததும் நீராட விரும்பிய விபீஷணன், அப்போது அங்கு வந்த அந்தணச் சிறுவன் ஒருவனிடம் அந்த விக்கிரகத்தைக் கொடுத்து, ‘நான் குளித்து விட்டு வரும் வரை இதைக் கீழே வைக்காதே!’ என்றான். அந்தச் சிறுவன் வேறு யாரும் அல்ல... விநாயகப் பெருமான்தான்!
அந்தச் சிறுவன், விக்கிரகத்தைக் கீழே வைத்துவிட்டு மலைக்கோட்டை உச்சியில் போய் உட்கார்ந்து விட்டான் என்கிறது புராணம்.
கரையேறிய விபீஷணன் அதிர்ந்தான். விக்கிரகத்தை அங்கிருந்து எடுக்க முயன்றான். அசைக்கக் கூட முடியவில்லை. கோபம் தாங்காமல் துரத்திக் கொண்டு வந்து, அந்தணச் சிறுவனின் தலையில் ஓங்கிக் குட்டினான் விபீஷணன். அந்த வடுவை உச்சிப் பிள்ளையாரின் தலையில் இன்றைக்கும் காணலாம் என்கிறது ஸ்தல புராணம்!
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
8 hours ago
ஆன்மிகம்
15 hours ago
ஆன்மிகம்
15 hours ago
ஆன்மிகம்
15 hours ago
ஆன்மிகம்
17 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago