சென்னை திருவான்மியூரில் உள்ள பிரமாண்டமான ஆலயம், ஸ்ரீமருந்தீஸ்வரர் கோயில். சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமையில் மருந்தீஸ்வரரைத் தரிசிப்பது விசேஷம். இந்த நாளையொட்டி, இன்று காலையும் மாலையும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
நோய் தீர்க்கும் ஸ்தலம் என்று போற்றப்படும் திருத்தலம் இது. வருடத்தின் பல நாட்களிலும் விழாக்களும் விசேஷங்களுமாக அமர்க்களப்படும் ஆலயம் என்கிறார்கள் பக்தர்கள்.
சோம வாரம் என்றால் திங்கட்கிழமை. இது, சிவனாருக்கு உகந்த நாள். இந்த நாளில் சிவனாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பாக, ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதத்தில் வரும் சோம வாரத்தில் வழிபட்டால், கூடுதல் பலன்களைப் பெறலாம்!
அன்றைய நாளில், திருவான்மியூர் ஸ்ரீமருந்தீஸ்வரரை வில்வ மாலை சாத்தி வணங்கினால், மனோபலம் பெருகும் என்பது ஐதீகம்! இந்த நாளில் காலையும் மாலையும் சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
5 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
9 days ago