ஆனைமுகன், முழுமுதற் கடவுள் என்றெல்லாம் போற்றி வணங்கப்படுவதற்கு உரிய கணபதியைத் தொழ வேண்டிய அற்புதமான நாள் சதுர்த்தி. அமாவாசையின் நான்காம் நாளும் பெளர்ணமியின் நான்காம் நாளான சதுர்த்தசியே சங்கடஹர சதுர்த்தி என்று விசேஷம் நிறைந்த நாளாக கொண்டாடப்படுகிறது.
சிவனாருக்கு எப்படி பிரதோஷ வேளையோ, துர்கைக்கு எப்படி ராகுகால வேளையோ... அதேபோல், விநாயகப் பெருமானுக்கும் சங்கடஹர சதுர்த்தி நாளில், மாலை வேளையே உகந்தது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
மாலையில், 4.30 முதல் 6 மணி வரையிலான நேரம் சங்கட ஹர சதுர்த்தியையொட்டி, கணபதிக்கு வழிபாடுகள், அபிஷேகங்கள், பூஜைகள், அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. இந்த நாளில், சிவனாரின் மூத்த மைந்தனை, யானைமுகத்தனை அருகம்புல் சார்த்தி வணங்குவது, நன்மை தரும் என்பது ஐதீகம்.
நாளை 7.11.17 செவ்வாய்க்கிழமை சங்கட ஹர சதுர்த்தி. மிகப்பெரிய சிவாலயங்களில் தொடங்கி, அம்பாள் குடிகொண்டிருக்கும் ஆலயங்கள் மட்டுமின்றி, தெருமுனையிலும் ஆற்றங்கரையிலும் உள்ள பிள்ளையார் கோயில்கள் உட்பட அனைத்து ஆலயங்களிலும் விக்னங்கள் தீர்த்து வைக்கும் விநாயகனை சிறப்புற வழிபடுவார்கள், பக்தர்கள்.
சங்கடங்களையெல்லாம் தீர்த்து வைப்பார் சங்கரன் மைந்தன். வேதனைகளையெல்லாம் போக்கி அருள்வார் விநாயகர். கவலைகளையெல்லாம் துடைத்தெறிவார் கணபதி பெருமான். நாளைய சங்கடஹர சதுர்த்தி நாளில், அருகம்புல் மாலையோ வெள்ளெருக்கம்பூ மாலையோ விநாயகருக்கு அணிவித்து வழிபடுங்கள். முடிந்தால்... சுண்டலோ பொங்கலோ, தயிர்சாதமோ கொழுக்கட்டையோ நைவேத்தியம் செய்து, இயலாதோருக்கு வழங்குங்கள். வாழ்வில், நிம்மதியும் நிறைவும் நிச்சயம்!
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
4 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
9 days ago