நெல்லையப்பர் - காந்திமதிக்கு கல்யாணம்! ஐப்பசி திருக்கல்யாண விழா நாளை தொடக்கம்

By வி. ராம்ஜி

நெல்லையப்பர் கோயிலில், நாளை  நவம்பர்  3ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது ஐப்பசி திருக்கல்யாண விழா. காலை 6.21க்கு மேல் 6.51 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது.

இதையொட்டி வருகிற 17.11.17 வரை தினமும் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள், உத்ஸவங்கள் என காலையும் மாலையும் விழாக்கள் நடைபெறும். 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 1 மணிக்கு, அன்னை காந்திமதி அம்பாள், தவக்கோலத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது காந்திமதி அன்னை, தங்கச் சப்பரத்தில் கம்பை நதிக்கு வந்து எழுந்தருள்வார்.

13ம் தேதி திங்கட்கிழமை, காலை 9 மணிக்கு நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் எழுந்தருள்வார். மதியம் 12.10 மணிக்கு மேல் 12.40 மணிக்குள் அன்னை காந்திமதி அம்பாளுக்கு நெல்லையப்பர் காட்சி கொடுத்தருளல் வைபவம் நடைபெறும்.

14ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று, அதிகாலை 5.15 மணிக்கு மேல் 5.45 மணிக்குள் ஆயிரங்கால் மண்டபத்தில், நெல்லையப்பருக்கும் காந்திமதி அன்னைக்கும் திருக்கல்யாண வைபவம் சீரும் சிறப்புமாக விமரிசையாக நடந்தேறும்.

12 நாள் திருவிழாவாக கோலாகலமாக நடைபெறும் ஐப்பசி திருக்கல்யாண வைபவப் பெருவிழாவில், கலந்து கொண்டால், தடைப்பட்ட திருமணம் நடந்தேறும். வாழ்வில், நல்ல வாழ்க்கைத் துணை அமையப் பெறலாம். கருத்தொருமித்த தம்பதியாக, இனிதே வாழலாம். மாங்கல்ய பலம் பெருகும். கணவர், நீண்ட ஆயுளுடன்  வாழ்வார் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்! 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

7 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்