ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழநி தண்டாயுதபாணி கோயில், பிரசித்திப் பெற்ற ஆலயம். புராண புராதனப் பெருமை மிக்க இந்தக் கோயிலில் வருடந்தோறும் கார்த்திகை தீபத் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். காப்புக்கட்டுதலுடன் தொடங்கிய விழா, தினமும் காலையும் மாலையும் உத்ஸவம், சிறப்பு பூஜைகள் என நடைபெறுகிறது.
இந்த வருடம் டிசம்பர் 2ம் தேதி கார்த்திகை தீபப் பெருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி, நேற்று 26ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது கார்த்திகை விழா. இதையொட்டி தினமும் காலையும் மாலையும் முருகப்பெருமான், சர்வ அலங்காரத்தில் வீதியுலா வரும் வைபவமும் விசேஷ பூஜைகளும் நடைபெறுகின்றன.
கார்த்திகை சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமையான இன்று பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள்.
நேற்று மாலையில் துவாரபாலகருக்கு காப்புக் கட்டுதலுடன் தொடங்கிய திருக்கார்த்திகை தீபத் திருவிழாத் தொடக்க பூஜையில், அறநிலையத் துறை அதிகாரிகள், ஊழியர்கள், பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
6 hours ago
ஆன்மிகம்
6 hours ago
ஆன்மிகம்
6 hours ago
ஆன்மிகம்
8 hours ago
ஆன்மிகம்
21 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago