ஒவ்வொரு ஊரிலும் ஏராளமான ஆலயங்கள் உண்டு. அதேபோல் ஊருக்கு ஒரு ஆஞ்சநேயர் கோயிலாவது சாந்நித்தியத்துடன் காட்சி தரும். நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையம் அருகில் உள்ள ‘கெட்வெல்’ ஆஞ்சநேயர் அப்படியொரு வரப்பிரசாதி என்கிறார் இந்தக் கோயிலின் ஸ்ரீநிவாச பட்டாச்சார்யர்.
திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையத்துக்கு அருகிலேயே அமைந்து உள்ளது ‘கெட்வெல்’ ஆஞ்சநேயர் திருக்கோயில். மிகச் சிறிய கோயில்தான் என்றாலும் விசேஷமான மூர்த்தம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயில் போல், தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள சஞ்ஜீவி வரத ஆஞ்சநேயர் கோயில் போல் , சென்னை நங்கநல்லூர் அனுமன் கோயில் போல், சென்னை ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோயில் போல் தனிக்கோயிலில் இருந்தபடி அருளும் பொருளும் வழங்கி அருள்கிறார் இந்த ஆஞ்சநேயர்.
சனிக்கிழமைகளில், ஆஞ்சநேயரைத் தரிசித்து வெற்றிலை மாலை அல்லது துளசி மாலை சார்த்தி வழிபட்டால், எதிர்ப்புகள் யாவும் அகலும். வெண்ணெய் சார்த்தி வழிபட்டால், வீட்டில் மங்கல காரியங்கள் தடையின்றி நிகழும். வடைமாலை சார்த்தி பிரார்த்தனை செய்தால், தொழிலில் லாபமும் உத்தியோகத்தில் உயர்வும் இல்லத்தில் பொருளாதார ஏற்றமும் கிடைப்பது உறுதி என்கிறார் ஸ்ரீநிவாச பட்டாச்சார்யர்.
சனிக்கிழமையில்... ’கெட்வெல்’ ஆஞ்சநேயரை வணங்கி வழிபடுங்கள். நல்லன எல்லாம் தந்தருள்வார் ஜெய் அனுமன்!
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
4 hours ago
ஆன்மிகம்
5 hours ago
ஆன்மிகம்
5 hours ago
ஆன்மிகம்
7 hours ago
ஆன்மிகம்
19 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago