அலக்சாண்டர் தேடிய அமிர்தம்

By பவித்ரா

உலகம் முழுவதையும் வெல்ல நினைத்த அலக்சாண்டர், வாழ்நாள் முழுவதும் மரணத்தையும் வெல்வதற்குப் போராடினார். உடலின் மரணத்தை வெல்ல இந்த உலகத்தில் உபாயம் உண்டு என்பதையும் ஒருகட்டம் வரை நம்பினார். அறிஞர்களை வரவழைத்து சாவாமை குறித்துப் பேசினார். அதுதொடர்பான நூல்களைப் படித்தார். இறவாமையைச் சாத்தியப்படுத்தும் அமிர்தத்தைத் தேடினார்.

இறவாமையின் அமிர்தம் தேடி தனது சிறந்த குதிரை வீரர்களையும் யாத்ரீகர்களையும் ஞானிகளையும் உலகம் முழுவதும் அனுப்பிவைத்தார். அவர்களும் உலகத்தின் பல மூலைகளுக்கும் சென்று மூலிகைகள், மருந்துகளைச் சேகரித்து வந்தனர். ரெய்கி போன்ற நடைமுறைகளையும் கற்றுவந்தனர். ஆனால் எதுவும் பெரிய பலனை அளிக்கவில்லை.

ஒருகட்டத்தில் சாவாமை தரும் அமிர்தத்தை தாமே தேடிக் கண்டு பிடிக்க முடிவெடுத்தார் அலக்சாண்டர். குதிரையில் நெடுந்தொலைவு பயணித்தார். அவரது பயணங்களிலேயே கடினமான பயணமாக அது அமைந்தது. ஆறேழு மாதங்கள் காடுகளிலும் மலைகளிலும் ஏறி அலைந்தார். வழியில் வெவ்வேறு நபர்களிடம் விசாரணையையும் மேற்கொண்டார். ஒரு கிராமத்தில் நுழைந்த அவர் விவசாயி ஒருவனைப் பார்த்து, அமிர்தம் குறித்துக் கேட்டார்.

“ஆமாம். எனக்கு அந்த அமிர்தம் இருக்கும் இடத்தைக் காண்பிக்கும் நபரைத் தெரியும். இங்கிருந்து ஐந்து மைல் தொலைவு போகவேண்டும்.” என்று வழிகாட்டினார்.

அலக்சாண்டர், அந்த நபரைத் தேடிச் சென்றார். அந்த மனிதன் மிகவும் சாமானியராகத் தெரிந்தான். “நீ தான் அலக்சாண்டரா? உனக்கு உனது இடத்திலேயே அமிர்தம் கிடைக்கவில்லையா? சரிதான். அதோ தெரியும் மலை மேல் ஒரு குகையில் அமிர்தம் இருக்கிறது. எடுத்துக் கொள்” என்று வழிகாட்டினான்.

எது இறவாதது

மலையின் அடிவாரத்தில் குதிரையை நிறுத்தினார் அலக்சாண்டர். நிறைய குடுவைகளைக் கொண்ட தனது பையை எடுத்துக்கொண்டு மலையில் ஏறத் தொடங்கினார். வெயில் ஏறிய நிலையில் உச்சிக்கு வந்து குகையைப் பார்த்தார். குகையின் வாயில் இருட்டாக மிகவும் சிறியதாக இருந்தது.

அலக்சாண்டர் படுத்து உருண்டு உள்ளே விழுவதுபோல நுழைந்தார். தவழ்ந்து தவழ்ந்து போய்க் கொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் நிமிர்ந்து நடக்கும் அளவு இடம் விரிந்தது. நடந்தார். ஒரு புள்ளியில் அவரே ஆச்சரியப்படும் அளவுக்கு தேவாலயம் போல உயர்ந்த கூரை வந்தது. அங்கே தேனடையிலிருந்து துளிர்ப்பதுபோல ஒரு திரவம் சுரந்து வழிந்தது. கூரையே திரவத்தின் தங்கநிறத்தால் பளபளத்துச் சுடர்ந்தது.

அலக்சாண்டர் வியந்து போய், ஒரு திரவச்சொட்டை கையில் ஏந்தி நாக்கில் விட்டார். சாப்பிடாதே என்று ஒரு குரல் கேட்டது. சுற்றிலும் பார்த்தார். மீண்டும் ஒரு துளியைச் சாப்பிடச் செல்ல, “வேண்டாம் வேண்டாம். சாப்பிட வேண்டாம்” என்று மீண்டும் அதே குரல் கேட்டது.

அலக்சாண்டர் கூர்மையாக அந்த இடத்தைப் பார்த்தார். அங்கு ஒரு காகம் மட்டும் ஒரு சிறிய கிளை போன்ற ஒன்றில் அமர்ந்திருந்தது.

காகத்தைப் பார்த்து அலக்சாண்டர், “நீதான் அந்தக் குரலா?” என்று கேட்டார். காகம் ஆமாம் என்றது. காகம் பேசத் தொடங்கியது.

“அந்த அமிர்தத்தைச் சாப்பிட்டு நான் செய்த தவறைச் செய்துவிடாதே. இங்கே நூறாண்டுகளுக்கு முன்னர் வந்து இந்த அமிர்தத்தைச் சாப்பிட்டேன். என்னால் சாகவே முடியவில்லை. எனக்கு மிகுந்த களைப்பாக உள்ளது. எனது சிறகுகளைப் பார். தூர்ந்து ஓட்டையாகி விட்டது. என்னால் பறக்கவும் இயலாது ” என்றது காகம்.

காகம் சொன்னதை அலக்சாண்டர் தனது இதயத்தில் கேட்டார். காகம் சொன்னதைப் புரிந்துகொண்டார். தனது குடுவைகளை எடுத்துக் கொண்டார். அத்தனையையும் ஓட்டையாக்கித் தூக்கிப் போட்டார். மலையின் அடிவாரத்துக்கு வந்தார்.

மரணமடையும் உடலுக்குள் மரணமடையாத ஒன்று இருப்பது அவருக்குத் தெரியவந்தது. அந்த அமரத்துவம் வாய்ந்த உயிர் நமது இதயத்துக்குள்தான் இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

3 hours ago

ஆன்மிகம்

20 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

மேலும்