சங்கட ஹர சதுர்த்தி எப்படி விசேஷமும் சிறப்பும் வாய்ந்ததோ... அதேபோல், சுக்ல சதுர்த்தியும் சிறப்பானதாகவும் சங்கடங்களையெல்லாம் தீர்க்கும் என்றும் போற்றப்படுகிறது.
விநாயகருக்கு மருத இலை கொண்டு அர்ச்சித்து வழிபட்டால், குழந்தை பாக்கியம் உண்டாகும். அரச இலையைக் கொண்டு பூஜித்து வணங்கினால், எதிரிகள் தொல்லை ஒழியும். அகத்தி இலை கொண்டு விநாயகப் பெருமானை அர்ச்சித்து வணங்கினால், துன்பம் அனைத்தும் நீங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். .
அரளி இலைகளால் மாலை தொடுத்து, மகா கணபதிக்கு சார்த்தி வழிபட்டால், குடும்பத்தில் அன்பு மேலோங்கும். தம்பதியிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
வில்வ இலையால் அர்ச்சித்து பிரார்த்தித்தால், நிம்மதியான வாழ்க்கையைத் தந்தருள்வார் விநாயகர். எடுத்த காரியம் யாவிலும் வெற்றியைத் தருவார் கணபதிபெருமான்!
வெள்ளெருக்கு கொண்டு பூஜித்து வணங்கினால், சகல ஐஸ்வரியங்களும் கிடைத்து சுபிட்சத்துடன் வாழலாம் என்கிறார்கள் பக்தர்கள்!
மாலையில் ஆலயம் சென்று விநாயகப் பெருமானைத் தரிசியுங்கள். சுக்ல சதுர்த்தியில் இல்லங்களில் சுபிட்சம் நிலவட்டும்!
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
5 hours ago
ஆன்மிகம்
18 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago