திருப்பட்டூரில் உங்கள் நட்சத்திர நாளில் 36 தீபமேற்றி வழிபடுங்கள்!

By வி. ராம்ஜி

உங்களின் நட்சத்திர நாளில் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்கு வந்து, 36 தீபமேற்றி வழிபடுங்கள். உங்கள் தலையெழுத்தையே திருத்தி அருள்வார் பிரம்மா .

திருச்சியில் இருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ளது சிறுகனூர். இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில், 5 கி.மீ. பயணித்தால் திருப்பட்டூர் திருத்தலத்தை அடையலாம்.

உங்களது ஜன்ம நட்சத்திர நாளில்... இங்கு வந்து பிரம்மாவை தரிசனம் செய்திடுங்கள். முடிந்தால், அப்போது ஸ்ரீபிரம்மாவுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்து, புளியோதரை நைவேத்தியம் செய்து, மஞ்சள் வஸ்திரம் வழங்கி வழிபடுங்கள். அதன் பிறகு, அதையடுத்து வருகிற ஒவ்வொரு நாளும், மாற்றத்தையும் நல்லதொரு ஏற்றத்தையும் நீங்களும் உங்கள் வீட்டாரும் சந்திப்பது உறுதி என்கிறார் பாஸ்கர குருக்கள்.

பிரம்மாவுக்கு 36 தீபமேற்றி வழிபடுவது இன்னும் கூடுதல் பலன்களைத் தரும் என்கிறார்கள். 27 நட்சத்திரங்கள் மற்றும் ஒன்பது கிரகங்கள் ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் மொத்தம் 36 தீபங்களை ஏற்றி, வெளிப்பிராகாரத்தை ஒன்பது முறை வலம் வந்து பிரார்த்தனை செய்தால், சகல கிரக தோஷங்களும் விலகிவிடும் என்பது நம்பிக்கை.

அப்படியே, உங்களின் ஜா கத்தை பிரம்மாவின் கமலப் பொற்பாதத்தில் வைத்து நமஸ் கரியுங்கள். நீங்களும் நன்றாக இருப்பீர்கள். உங்கள் சுற்றமும் சிறப்பாக இருக்கும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

8 hours ago

ஆன்மிகம்

9 hours ago

ஆன்மிகம்

9 hours ago

ஆன்மிகம்

11 hours ago

ஆன்மிகம்

23 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்