ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவில் தீர்த்தவாரி உற்சவம்

By அ.கோபால கிருஷ்ணன்

ஶ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவில் 11-ம் நாளான நேற்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் பிரசித்திபெற்ற திரு ஆடிப்பூர தேரோட்டம் கடந்த சனிக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. 11-ம் நாள் விழாவான நேற்று கோயிலில் இருந்து ஆண்டாள் ரெங்கமன்னார் புறப்பாடாகி மேளதாளங்கள் முழங்க வாழைகுளம் தெருவில் உள்ள தீர்த்த வாரி மண்டபத்தில் எழுந்தருளினர்.

திருமுக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவமும், அதன்பின் தீர்த்தவாரி மண்டபத்தில் ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 12-ம் நாளான இன்று (ஜூலை 25) மாலை புஷ்ப யாகத்துடன் ஆடிப்பூர திருவிழா நிறைவு பெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE